என்னைக்காவது இந்த மாதிரி சின்னதா எழுதியிருப்பத படிச்சி பாத்து இருக்கீங்களா..? பயப்புடாதீங்க..!

0 2,373

அதிர்ச்சியான தகவல்.

ஆங்கில இந்து பேப்பரை படித்தேன் பக்கம் 5ல் கோக்க கோலா முழுப்பக்க விளம்பரம் இருந்தது. ஒரே ஒரு டப்பா (கீழே உள்ளது) படத்துக்கு எதுக்கு ஒரு பக்கத்துக்கு விளம்பரம் என உற்றுநோக்கினால் கீழே நான்கு வரிகளில் சின்னதாய் சில விபரங்கள், அவைகள் கீழ் வருமாறு….

terms and conditions:
contains no fruit added flavours artificial sweeteners.

this carbonated water contains an admixture of aspartame and acesulfame potassium. not recommended for children.

என்ன இது அஸ்பர்டேம்?
என்ன இது அசேசல்பேம் பொட்டாசியம்?

குழந்தைக்கு உகந்தது அல்ல என்று வேறு இருந்தது! சரி என இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

இந்த இரு இராயணங்களின் பக்கவிளைவுகள் சாதாரண தலைவலி முதல் மிகக்கொடிய புற்றுநோய் வரை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியது என்றும் அதோடு பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள் ஏற்படுத்தக்கூடியது எனப் பட்டியல் நீண்டது!

பலமுறை நானே எழுதியுள்ளேன் குளிர்பானங்கள் பூச்சிமருந்துகளுக்கு சமம் என நண்பர்களோடு திரையரங்கு சென்றால் கூட அங்கு குளிர்பானம் வாங்கினால் அதன் தீங்கை எடுத்துச்சொன்னால் நம்மை தான் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போல பார்க்கின்றனர்.

விவசாயத்துக்கு தண்ணி இல்ல,
குடிக்க நிலத்தடி தண்ணி கிடையாது கேன் தண்ணி தான், இவ்வளவு பிரச்சனை நாட்டுக்கு! பல நோய் பிரச்சனை உடலுக்கு!

உணவே மருந்து என்ற காலத்தை கடந்து தற்போது விசமே உணவு என்ற காலத்தில் வாழ்கிறோம்..!

முடிந்த வரை பகிரவும் பலருக்கு இது புரியட்டும்!!!
வழக்கறிஞர் சு.செல்வநாயகம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.