என்னென்ன நினைச்சிருப்பான் சின்னத்தம்பி..? இந்த சின்னத்தம்பி என்ற யானையின் கண்களில் உணருகிறேன் அந்த அகதியத்தை.!

0 942

என்னென்னநினைச்சிருப்பான் சின்னத்தம்பி???
கோவை வனப்பகுதியில் மனைவி, குட்டி என்று சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை, அதன் உறவுகளிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து தனிமைப்படுத்தி, கயிறு கட்டி, ஜே.சி.பி வைத்து இழுத்து, கும்கி யானைகளால் குத்தி, தந்தத்தை உடைத்து, காயங்களுடன் டாப்சிலிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்துவிட்டனர்.

என்னென்ன நினைச்சிருப்பான் சின்னத்தம்பி???.நான் பிறந்தது முதல் இளங்கலை கல்லூரி படிப்பு வரை என் சொந்த ஊரிலேயேதான்.வீட்டில் நான் கடை குட்டி ரொம்ம்ம்ப செல்லம்.யார வேணா விட்டு பிரிஞ்சிருப்பேன் வீட்ட விட்டு பிரிய மாட்டேன்.அதுக்காகவே ஊருக்கு போறது உறவுக்காரங்க வீட்டுக்கு போறதுலாம் தவிர்திடுவேண்.

முழு ஆண்டு விடுமுறை விட்டா பெரியம்மா ஊருக்கு அத்தை வீட்டுக்கு தாத்தா வீட்க்கு னு என் அக்காவ தான் வந்து அழைச்சிட்டு போவாங்க.அம்மாவும் வந்தா தான் நான் வருவேன்.அம்மா முந்தானைய பிடிச்சிட்டே இருக்கான்னு அத்தைலாம் கிண்டல் பண்ணுவாங்க.

எனக்கு அது உள்ளூர பெருமையா தான் இருக்கும். அதயெல்லாம் சட்ட பண்ண மாட்டேன்.என்னதான் இருந்தாலும் வீட்டிற்கு நான் குழந்தைதான்.அம்மா னா உசுரு.நீங்களும் உங்க வீட்டுக்கு அப்படி தான்.

அதே நேரம் அம்மாகிட்ட வஞ்சனை இல்லாம அடி விழும்.அது தனி கத.செங்குந்தர் கல்லூரியில யூ.ஜி படிக்குறப்போ கடைசி வருட செம் ஆரம்பிக்குறதுக்கும் ஒரு நாள் முன்னாடி நான் கீழ விழுந்து தோள்பட்ட எழும்பு ஒடைஞ்சிருச்சு.

அவ்வளவு தான் வீடே ரெண்டாகிடுச்சு.நான் படுத்த படுக்க ஆகிட்டேன்.அழுதுக்கிட்டே எனக்கு மாத்திர சாப்பாடு ஆட்டுக்கால் சூப் ஊட்டி விட்டுட்டே இருப்பாங்க அம்மா.என் நண்பன் எங்க வீட்லயே தங்கி எனக்கு சிலபஸ்ல எல்லாமே சொல்லி தந்து என்னை கல்லூரிக்கு அழைச்சிட்டு போய்டு வருவான்.

அப்பாக்கு ஒரு தனியார் பேருந்து நிருவனத்தில் ஓட்டுனரா பணி.வீட்டுக்கு வர்றப்போ அவரு வண்டில வந்த பேசஞ்சர் பண்ணுன ஏதாதும் இன்சிடன்ட சொல்லுவாரு.அந்த கதையெல்லாம் கேட்க அவ்வளவு பிடிக்கும்.ஒரே சிரிப்பா இருக்கும்.எங்க அப்பாக்கு ஹியூமர் சென்ஸ் அதிகம்.அவருடைய இந்த ஜீன் எனக்கு கொஞ்சம் தூக்கலாவே இருக்கு.எங்களுக்கு நிறைய திண்பண்டம் வாங்கி வருவாரு.நாங்க கேட்டு அவரு வாங்கி தராதது னு ஒரு பொருள் கூட என்னால எவ்வளவு யோசிச்சாலும் சொல்ல முடியாது.

நான் பொறந்து இத்தனை வருசத்துல ஒரே ஒரு தடவ தான் என்ன அடிச்சிருக்காரு.என்ன கேட்டாலும் வாங்கி தருவாரு.எந்த அளவுக்கு னா..எங்க குடுபம் இருக்கிற சூழல்ல அப்போ பி.எஸ்.சி லாம் என்ன படிக்க வெச்சதே பெருசு.ஆனா நான் பிரியபட்டேன்னு சென்னைல லயோலா கல்லூரியில எம்.எஸ்.சி படிக்க வெச்சாரு. முதன் முதலில் முதுகலை பட்ட படிப்பு படிக்க சென்னை செல்கிறேன்.

முதன் முதலா சொந்த ஊர விட்டு பிரிறேன்.நுழைவுத்தேர்வு நேர்முகத்தேர்வு னு எல்லாத்துலயும் தேர்வாகி எனக்கு லயோலா ல சீட்டு
கிடச்சது ஒரு புறம் மகிழ்சினாலும் என் அம்மாவுக்கு முகம் வாடிருச்சு பொக்கு னு போயிட்டாங்க நான் அவங்கள விட்டு வெளியூர் போறேன் னு.

நான் அந்த ஏஜ்ல வீட்ட விட்டு வெளிய போய் வெளியூர் போய் படிக்குறதுல எக்ஸைட்மெண்டா இருந்தேன்.அதனால எங்க அம்மா முகம் பொக்குனு போறத அவ்வளவா கவணிக்கல.

விடுமுறை முடிஞ்சது.மூட்ட கட்டியாச்சு.எங்க அப்பா ஓட்டுனரா இருக்க அதே பஸ்ல என்ன சென்னை கூட்டிட்டு போறாரு.திருச்செங்கோடு பேருந்து நிலையம் வரைக்கும் அம்மா தான் TVS xl ல என்ன கொண்டு வந்து விட்டாங்க.இறங்கிட்டு அம்மாவ வழியனுப்பி வெச்சிட்டு நான் கிளம்புறேன்.வீட்டுக்கு போறப்போ என் அம்மா அழுதுகிட்டே போனாங்களாம் இத ரெண்டு வருசம் கழிச்சு ஒரு நாள் பேசும்போது சாென்னாங்க.

பஸ்ல அமர்ந்தாச்சு.வண்டி கிளம்புது.கிணறு ஆழத்த எட்டி பார்கும்போது….நல்ல தூக்கத்துல திடீருனு எழுந்து கும் இருட்ட பாக்கும்போது மனசு ஒரு நிமிசம் பகீர் னு ஆகுமே அதே மாதிரி முதன் முதல்ல தோனுச்சு.சொந்த ஊர விட்டு போறோம்.நாளைல இருந்து அம்மா அப்பா கூட போன் ல மட்டும் தான் பேச போறோம்.ஒரண்ட இழுக்க அங்க அக்கா இருக்காது.புது ஊரு.அது இது னு ஒன்னொன்னா தோனுது.

ஐயய்யோ!! ஒரு தப்பான முடிவு எடுத்துட்டோம் போல னு தோனுது.அதுவரை நான் வேடிக்க பாத்துட்டு இருந்த ஜன்னல்ல சோகம் வந்து நிறம்பிவிட்டது.அதுவரை வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்த சாலையோற புற்க்கள் மரங்கள் மெதுவாக ஓட ஆரம்பிக்கிறது.கண்களை விசாலமாக விரித்து திருச்செங்கோடின் தெருக்களின் காட்சிகளை எல்லாம் கண்களில் வேக வேகமாக பதிய வைக்கிறேன்.கடைசி முறை இந்த உலகை பார்த்துக்கொள்ள மரணதண்டனை கைதிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி கிடைக்குமோ அப்படி பார்க்கிறேன்.

தூக்கு தண்டனை நிறைவேற்றும் போது ஒரு கருப்பு நிற முகமூடியை அணிவிப்பார்களே அதற்கு ஒரு நிமிடம் முன் நாம் காணும் காட்சியை நம் கண்கள் எவ்வளவு வேகமாக முழுமையாக ஆசை தீர படம் பிடிக்குமோ அப்படி பார்க்கிறேன்.

நீச்சல் தெரியாத ஒருவன் கடலில் தத்தளித்துக்கொண்டு மூழ்கும் போது கடைசி ஒரு முறை தலையே தூக்கி ஆகாயத்தை பார்பானே அப்படி.என் தாத்தாவின் உடலை மின்தகனம் செய்த போது அந்த கதவு மூடும் இறுதி நிமிடம் வரை அவர் உடலை உற்று பார்த்தேனே அப்படி பார்த்துக்கொண்டே சென்றேன்.

பேருந்து இப்போது சேலம் போகும் சாலையை தொடுகிறது.அது கடந்த மூன்று ஆண்டுகளாக என் கல்லூரி பேருந்து சென்ற சாலை….அதே சாலை.ஆனால் நான் இப்போது கல்லூரிக்கு செல்லவில்லை.ஊரை விட்டு செல்கிறேன்.நான் மூன்று ஆண்டுகளாய் பயணப்பட்ட அதே பாதை எனக்கு வேறு மாதிரி தெரிகிறது.கல்லூரியை நெருங்க நெருங்க என் அழுகையை அடக்கிக்கொள்ள ஜன்னல் கம்பியின் மீது என் கைகள் செலுத்திய கூடுதல் அழுத்தத்தை இப்போது நினைத்தாலும் உணர முடிகிறது.

என் கல்லூரி மீது எனக்கு பெரியதாக பாசம் எல்லாம் இல்லை.இன்னும் சொல்லப்போனால் எப்படா இந்த ஜெயில்ல இருந்து தப்பிப்போம் னு தான் சத்தியமா நினைச்சிருக்கேன்.ஆனால் அதை கடந்து செல்லும்போது +2 முடித்துவிட்டு முதன் முதலாக நானும் என் நண்பனும் விண்ணப்பம் வாங்க வந்தது, முதல் நாள் வகுப்புக்கு வந்தது,என் நண்பர்கள்,என் டிப்பார்மெண்ட் பிளாக்,முத்தழகு மேம்,சுமையா மேம்,எபி சார்,சரண்யா மேம்,ஜே.எஸ்,சுரேஷ் சார் சம்பத் சார்,மகித்தா மேம்,.ராஜ்குமார் அண்ணா,பையோ கெமிஸ்ரி மேம்,.தமிழ் மேம்,ஆண்டு விழா,விளையாட்டு தினம் என அனைத்தும் நிவைுக்கு வருகிறது.

எனக்கு பிடிக்காத சில பேராசிரியர்கள் கூட அந்த கனம் பிடித்துப்போகிறார்கள்.
கேண்டீன்,நானும் என் நண்பனும் வழக்கமாக மதிய உணவு சாப்பிடும் மரத்தடி.இப்படி சர சரவென இத்தனை சம்பவங்களை இடங்களை என் வாழ்வில் வந்த கதாபாத்திரங்களை என் மூளை scroll down பண்ணுகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
அப்போது 2011ம் ஆண்டு.ஈழஇனப்படுகொலை பற்றி கடந்த 3 ஆண்டுகலாக கேள்விப்பட்டு,படித்து,மேடைப்பேச்சுகள்,காணொளிகள் வாயிலாக என் மனதில் பல காட்சிகள் படிமமாக பச்சை வாசம் மாறாமல் படிந்திருந்த காலம்.அகதிவாழ்கை,.இடப்பெயற்வு பற்றி நான் கண்ட புகைப்படங்கள் எல்லாம் மேலெழும்புகிறது மனதில்.இதுக்கே இப்படி இருகே.அகதியாக போகும் போது எப்படியெல்லாம் வலிக்கும் ல னு எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன்.அந்த வலி எப்படியானது என முதன் முதலில் ஆழமாக ரொம்ப நேரம் சிந்திக்தாெடங்கினேன்.அதை உணர முயற்ச்சித்தேன்.

அதன் பிறகு இன்று இந்த சின்னத்தம்பி என்ற யானையின் கண்களில் உணருகிறேன்.அந்த அகதியத்தை.
இந்த உலகில் உன்மையான தூய அன்பு வாழ்கிறது என்றால் சத்தியமாக அது விலங்குகளிடம் மட்டும் தான்.விலங்குகள் ரொம்ப சென்சிடிவ்ங்க.பசி அன்பு விளையாட்டு குழந்தைதனம் வீரம் வேட்டைகுணம் கோபம் காமம் என எல்லா உணர்விலும் இயற்கை படைத்த அதே ஆதி குணங்களோடு இருப்பது விலங்குகள் மட்டுமே.

மனிதன் கண்ணில் படாமல் இயற்கை அன்னையின் மடியில் தவழும்வரை அவைகள் எல்லாம் கொடுத்தே வைத்தவைகள் தான். மனிதர்களை போல மறதி என்ற அலட்சிய குணம் விலங்குகளுக்கு இல்லை.அதிலும் யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம்.பாவம் இந்த யானை கோவையை விட்டு பிரிந்து செல்லும்போது என்னென்னலாம் நினைச்சிருக்கும்???அதோட குடும்பம் என்னென்ன நினைச்சிருக்கும்??? கேவளம் சுயநலம் பிடிச்ச,பிராக்டிக்கல் மைண்டு இருக்க மனுஷங்களுக்கே எமோஷன் இருக்குறப்போ.

விலங்குகளுக்கு??? நம்ல மாதிரியே அதுக்கும் பிறந்த ஊர் விளையாடிய இடம் நடந்த பாதை வாழ்ந்த வாழிடம்,பழகிய சக விலங்குகள் குடும்ப உறவு மகன் மகள் னு இருக்கும்ல.நாம எத்தன ஊரு எத்தன நாடு னு சுத்துனாலும் வீட்டுக்கு வந்து நம் வீட்டு ஃபேன் சுவிச்ச போட்டு கட்டில்ல படுக்குறப்போ ஒரு நிறைவும் comfortableness கிடைக்கும்ல??..அது எல்லா உயிரிக்கும் இருக்குங்க.

இங்க மனுசங்க comfortableness அ எண்ணிப்பாக்கிற அரசாங்கமே இல்லையாம்.இதுல விலங்கின நலத்தை யார் பேணுவார்கள்.இது என்ன உயிர்நேய அரசா.மயிலுக்கு போர்வை போர்த்திய தமிழர் அறத்தின் வழி நடக்கும் அரசா?…இல்லையே.
உனக்கு ஸ்கூட்டிக்கு மானியம் தர்றேன் டிவி தறேன் ஓட்டுக்கு இவ்வளவு தாறேன் னு சொல்ல ஆள் இருக்கே தவிற.அனைத்து உயிர்களுக்குமான தேவையை நிறைவேற்றக்கூடிய ஆள் இல்லை☹️..அப்படி இருக்கும் ஆள் கையில் அதிகாரம் வழங்கப்படுவது இல்லை. இத்தனை தந்தும் உழவனின் நிலை ஏன் உயரவில்லை…?

நல்ல அரசியலை நாம் தீர்மாணிக்கவில்லை எனில் தீய அரசியல் நம் வாழ்க்கையை மட்டுமல்ல அனைத்து உயிரிகளின் வாழ்க்கையையும் தீர்மாணித்துவிடும்.
பிரச்சனைகளுக்கான காரணம் இருக்கும் வரை பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.அந்த காரணத்தை கருவறுக்காமல் எதையும் மாற்ற முடியாது.தமிழனே அகதியாகவும் அடிமையாகவும் இருப்பதால் தமிழன் நிலத்தில் வாழுகிற உயிரிகளும் அகதியாக தொடங்குகிறது. அனைத்து உயிர்களுக்குமான அரசியலே இங்கு தேவைப்படுகிறது.

-ஆக்கம்: வருண் சுப்ரமணியம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.