எந்த டூத் பேஸ்ட்’ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கினாங்க..?

0 213

எது நாகரீகம்…?

நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த கிரிக்கெட் வீரர் சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????

எந்த டூத் பேஸ்ட்’ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கினாங்க ???

அமேசான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய தலையில தேச்சு தான் முடிய வளத்தாங்களா???

எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???

எந்த இன்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????

…..
வாழ்க்கை தரத்தை உயர்த்திட்டோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ….
நாகரீகம் நாகரீகம்’னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் ….

” ஏன்டா படிச்சோம்னு இருக்கு ….
படிக்கலன்னா, எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,
காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு,
தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு ,
அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி ,
இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நம்மள …. நாசமா போக…………”

இப்படிக்கு
விவசாய குடும்பத்தில் பிறந்தவன்,
ஒரு தேசப்பற்றுள்ளவனின் புலம்பல்கள்..

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.