எந்த ஆங்கிலேயன் இதையெல்லாம் கற்றுக்கொடுத்தான்..? எதற்கு எடுத்தாலும் ஆங்கிலேயன் வல்லவன் என்று வசைபாடும் மக்களே..?

0 1,152

காலையிலே உம்பளச்சேரி மாட்டின் மோரை சிலுப்பி வெண்ணெய் எடுத்தாகிவிட்டது
கிட்டதட்ட ஒரு வாரம் தேக்கிய ஏடில் எடுத்தது !

நம்ம முன்னோருக்கு மோரில் இருந்து வெண்ணெய் எடுக்கும் அறிவியலை எந்த ஆங்கிலேயனும் சொல்லி தரவில்லை!

மோரில் நாம் மைய விலக்கு விசையை(centrifugal force) மத்தை கொண்டு செல்லுத்தினால் மோர் தனியாக , வெண்ணெய் தனியாக பிரியும் என்ற நுட்பத்தை யாரும் சொல்லி கொடுக்காமல் அனுபவத்திலே தானே கற்றனர்!

இவ்வளவு தான் physics,
இதில் botony , zoology , chemistry யும் வருகிறது,

மாடு உண்பது இலை, புள் , வைக்கோல்களில் phosphorus, nitrate, ammonia, plant protein இருக்கின்றது இது மாடு வயிற்றில் சென்று
அங்கு இருக்கும் நுண்நுயிர்கள் மூலம் சிதைவுற்று calcium, protein நிறைந்த பாலாக மடியில் சேர்கிறது பிறகு எஞ்சிய கழிவு ammonia வாக, கரிம சத்தாக (organic mater) வெளி வருகிறது, அது மீண்டும் மண்ணில் உள்ள நுண்நுயிர்க்கு உரம் நுண்நுயிர் nitrogen , potash , phosphorus என்ற சத்துக்கள் எல்லாம் செடிகளுக்கு தரும்!

சரி ஏடு எடுத்து வைத்து சிலுப்பும் போதும் நுண்நுயிர் செயல்பாட்டால் தான் நொதித்தல் நடக்கின்றது!

நாம் எடுத்த வெண்ணெயில் காய்ச்சும் போது முருங்கை இலை இடுவோம் முருங்கை இலையில் இரும்பும் , மெக்னீசியமும் நிறைந்துள்ளது கூடவே நெய்யில் இருக்கும் கொழுப்பு, நார், புரத சத்துக்கள் சேர்த்து …

சப்பா ! இவ்வளவு தான் அறிவியல் இத போய் நான் 12 வருஷம் படிச்சிருக்கேன்

நம்ம சுற்றி நடக்கிறத நம்ம முன்னோர்கள் கவனிச்சாங்க எளிமையான வாழ்க்கையில் அறிவியலை கற்றார்கள்.. நாம பணம் கட்டி சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாம , பந்தம் பாசம் இல்லாம கல்விய கற்று … (.)

சரி விஷயத்துக்கு வரேன்!
1 லி பாலில் எனக்கு 40கிராம் தான் நெய் கிடைத்தது தோராயமாக 24 லி தேவைபடும் 1 லி நெய் எடுக்க ,
1 லி நாட்டு மாட்டு பால் ₹50
என வைத்துக்கொண்டால் ₹1200 என்று வரும் உடல் உழைப்பு எரிபொருள் , பேக்கிங் நுட்பம், எல்லாம் சேர்த்து -₹1500 / கி நெய் !

கலப்பின மாட்டு பாலாக இருந்தால் ₹800-1000 /கி வரும்

நீங்கள் வாங்குவது நெய் தானா?

உம்பளச்சேரி மாட்டு நெய், அதன் சானி வயலுக்கு எரு , வயிலில் விளைந்த நெல் உணவு, காய்கறி , நல்ல கடலையில் எடுத்த எண்ணெய், காலத்திற்கேற்ற பழங்கள்.. பம்பு செட் குளியல்…

பணம் அதிகம் இல்லை என்றாலும் நிம்மதியான தற்சார்பு வாழ்வியல் !
இதை விடவா சொர்க்கம் கிடைத்துவிடும்…

ஆக்கம் : வ.சதிஸ்,.B.E (civil),
இயற்கை விவசாயி(மாடு மேய்ப்பவன்),
கோட்டப்பூண்டி,
செஞ்சி,

You might also like

Leave A Reply

Your email address will not be published.