எத்தனை முறை உன்னை வெறுத்தாலும்..! நானும் உன்னை காதல் செய்கிறேன்…!

0 427

I HATE U MONEY நான் படிப்பதற்கு தடையாய் இருந்த பணமே… உன்னை நான் வெறுக்கிறேன்..!

நான் வளர்வதற்கு தடையாய் இருந்த பணமே… உன்னை நான் வெறுக்கிறேன்..!

என் அக்காள், தங்கையை நல்ல உறவுகளுக்குள் கட்டி கொடுக்க தடையாய் இருந்த பணமே… உன்னை நான் வெறுக்கிறேன்..!

என் கனவிற்கும், உழைப்பிற்கும், ஊதியத்திற்கும் தடையாய் இருந்த பணமே… உன்னை நான் வெறுக்கிறேன்..!

தாய், தந்தை, மனைவியின் நல்ல மருத்துவத்திற்கு தடையாய் இருந்த பணமே… உன்னை வெறுக்கிறேன்..!

கடன் கட்ட முடியாமல் என்னை கஷ்டபட வைத்த பணமே… உன்னை வெறுக்கிறேன்..!

பிஞ்சு பிள்ளையை பிரிந்து வாழ காரணமான பணமே உன்னை வெறுக்கிறேன்..!

வரதட்சணையாய் வந்த பணமே உன்னை வெறுக்கிறேன்..!

உற்றார், உறவினரை உதாசின படுத்த வைத்த பணமே உன்னை வெறுக்கிறேன்..!

ஏழை பணக்காரனை உருவாக்கிய பணமே உன்னை வெறுக்கிறேன்..!

வட்டியாய் வாடகையாய் வரும் பணமே உன்னை வெறுக்கிறேன்..!

காசே தான் கடவுளடா என்ற வாசகத்தை உருவாக்கிய பணமே உன்னை வெறுக்கிறேன்..!

திருடனை உருவாக்கிய பணமே உன்னை வெறுக்கிறேன்..!

அடி தடிக்கு பயன்படும் பணமே உன்னை வெறுக்கிறேன்..!

அரை வயிறு சோறு போடும் பணமே உன்னை வெறுக்கிறேன்..!

பல அனாதைகளையும், அநாதை இல்லங்களையும் உருவாக்கிய பணமே உன்னை வெறுக்கிறேன்..!

காதல் தோல்விகளுக்கு காரணமான பணமே உன்னை வெறுக்கிறேன்..!

பிச்சை பாத்திரத்தை உருவாக்கிய பணமே உன்னை வெறுக்கிறேன்..!

நண்பர்கள் சிலரை இழக்க காரணமான பணமே உன்னை வெறுக்கிறேன்..!

விலை மாதுவை உருவாக்கிய பணமே உன்னை வெறுக்கிறேன்..!

விளையாட்டில் கூட விளையாடும் பணமே உன்னை வெறுக்கிறேன்..!

இப்படி எத்தனை முறை உன்னை நான் வெறுத்தாலும் அத்தனை முறை உன்னையே தேட வைத்துவிட்டாய்… அதனால் அழுகிறேன்..

யாரோ…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.