எதிரி நாட்டிலும் இறையாண்மை காத்த நம் ராணுவ வீரர்..! இதை அரசியலாக்காமல் அவரை மீட்பதே இந்திய குடிமகனின் கடமை

0 494

பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் விசாரணையின் போது, தான் வந்த விமானத்தின் பெயரையும், எதற்காக வந்தேன் என்பதையும் தெரிவிக்க முடியாது என , இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் கூறியுள்ளார். அவரது தைரியத்தை பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் வியந்தனர். இது குறித்த வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது.

மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் என்பவர் மாயமானார். இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். டில்லியில் பணிபுரிந்து வருகிறார். அவரது பெற்றோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

அபிநந்தனை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறி சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அபிநந்தன் பேசியது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் உறுதித்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை.

அந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்புவதும், அதற்கு அபிநந்தன் பதில் அளிப்பது போன்று உள்ளது.

ராணுவ அதிகாரி: உங்களது பெயர் என்ன?

அபிநந்தன்: கமாண்டர் அபிநந்தன்

ராணுவ அதிகாரி: எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம்?

அபிநந்தன்: ஆம். நான் நன்றாக நடத்தப்படுகிறேன். இங்கு சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். இந்த கருத்தை, எனது நாட்டிற்கு சென்ற பிறகும் மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். ராணுவ வீரர்கள், கும்பலிடமிருந்து என்னை கேப்டன் , அதிகாரிகள் அனைவரும் நன்றாக கவனித்து கொண்டனர். இதனையே, இந்திய ராணுவத்திடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரி: இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் நீங்கள்?

அபிநந்தன்: அதனை நான் உங்களிடம் சொல்ல வேண்டுமா?நான் தென் பகுதியை சேர்ந்தவன்

ராணுவ அதிகாரி: நீங்கள் கல்யாணமானவரா?

அபிநந்தன்: ஆமாம்

ராணுவ அதிகாரி: தேநீர் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்

அபிநந்தன்: தேநீர் சிறப்பாக உள்ளது. நன்றி.

ராணுவ அதிகாரி: நீங்கள் வந்த போர் விமானத்தின் வகை என்ன?

அபிநந்தன்: அதனை உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், உடைந்த பாகங்களை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்

ராணுவ அதிகாரி: என்ன பணிக்கு வந்துள்ளீர்கள்?

அபிநந்தன்: அதனை சொல்ல முடியாது. இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது

வீரரின் பெருமையை பேசும் வீரரின் குடும்பத்திற்கு இந்த வீரரை உயிருடம் ஒப்படைக்க கடமைப்படவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்

ஜெய்ஹிந்த்

பெருமையுடன் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.