உயரத்தை வைத்து காளைகளின் திறமையையும் வயதையும் எப்படி தமிழக கால்நடை துறையால் கணிக்க முடியும்..?

0 309

1.காளைகளுக்கான உடற்தகுதிச் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

2.இன்று (02.01.2019) முதல் (12.01.2019) வரை அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கால்நடைகளுக்கு தகுதிச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3.ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள தகுதியான வகையில் காளைகளின் உயரம்,உடற்திறன் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து பின்னர் தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

4.ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளின் உயரம் 120 சென்டி மீட்டருக்கு அதிகமாக இருக்கவேண்டும்.

5.மேலும் காளைகளின் 2 வயது முதல் 8 வயது வரை கொண்டவையாகவும் இருக்கவேண்டும்.

6.உடற்தகுதிச் பெற வரும் காளையின் உரிமையாளர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மற்றும் காளை வளர்ப்பவரின் புகைப்படம் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7.தகுதிச்சான்று இருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்வதற்கான பதிவு டோக்கன் வழங்கப்படும்.

இதில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று 4 வது கருத்து,,,
ஜல்லிக்கட்டில் பங்கு பெறும் காளைகள் 120 சென்டி மீட்டர் உயரம் இருக்க வேண்டும் என்ற கருத்து,,,,

உயரத்தை வைத்து காளைகளின் திறமையையோ அல்லது வயதையோ எப்படி கணிக்க முடியும்,,,,
காளைகளின் பற்களை வைத்தே வயதினை கணிக்க வேண்டும்,,,

4 அடி உயரம் என்பது முட்டாள் தனம்,,,, தமிழகத்தில் உள்ள மாடுகளை 4 உயரம் சற்று குறைவாக தான் இருக்கும்,,,,
சுத்த நாட்டு மாடுகள் உயரம் கம்மியாக தான் இருக்கும்,,,
அப்போ உயரம் குறைந்த மாடுகளை கறிக்கு ஏற்றி விடுவதா

உயரத்தை வைத்து கணக்கிடுவது தவறு

பொதுநலன்கருதி வெளியிடுவோர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.