உடம்பை பார்த்து கொள்ளுங்கள்…- ஒரு செவிலியரின் வேண்டுகோள்.

0 765

இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்…

ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்ட்..

ஒரு மருத்துவமனைல ஒரு நாளைக்கு 400 பேர் டயாலிஸிஸ் பண்றாங்க…

அப்போ ஒட்டு மொத்தமா எவ்வளவு பேருக்கு
கிட்னி பாதிப்பு இருக்குமுன்னு கணக்கு பண்ணிக்கோங்க..

ஒரு டயாலிஸிஸ்க்கு 2500₹.

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்…

அதுவும் ஆயுள் முழுவதும்..

என்ன தலை சுத்ததுதா..

சரி டயாலிஸிஸ் பண்ண வர்றவுங்கெல்லாம் வயசானவுங்கன்னு நினைச்சீங்களா?

அதுவும் இல்லை..

5 வயது குழந்தைல இருந்து +2 க்கு எக்ஸாம் எழுத போற பையன், கை குழந்தையோட வர்ற தாய் என வயது வித்தியாசம் இல்லாம பாதிக்கப்பட்டு இருக்காங்க..

+2 பையன் டயாலிஸிஸ் பண்ணீட்டு எக்ஸாம் எழுதபோறான்..

என்கிட்ட அக்கா நான் 1000 க்கு மேல மார்க் வாங்குவேன்கான்னு சொல்றான்..

எதனால கிட்னி பெயிலியர்ன்னு அவுங்க அம்மாகிட்ட கேட்டேன்…

சிறு வயதுல இருந்தே அதிகமான மாத்திரை (காய்ச்சல், ஆஸ்துமா) கொடுத்து இருக்காங்க.

கல்லூரி விரிவுரையாளர் ஒரு பெண் கல்யாணம் ஆகி 5 வயது பையன் இருக்கான்..

எதனால இந்த பிரச்சினை ன்னு கேட்டேன்…

காலேஜ்ல பாத்ரூம் நல்லா இருக்காதாம்…

யூரினை அடக்கிட்டே இருப்பாங்களாம்…

அதனால கிட்னி பெயிலியர்.

மூச்சுத்திணறல் வந்து அவுங்க படுறபாடு வெளிய சொல்ல முடியாது..

பெரிய கொடுமை????

பிரச்சினை வந்துட்டா தீர்வு இல்லை…

சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்…

1 எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க

2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க

3. பசிச்சா மட்டும் உணவை எடுத்துக்கோங்க

4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..

5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..

தெருவுல கடல்உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க

6. அல்லது இந்துப்பை பயன்படுத்துங்க

7. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க

8. வசதி இருக்குன்னு கடைல போய் இனிப்பு பண்டங்கள், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க…

10. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க…

11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க

12. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க…

தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..

வீட்டு வைத்தியமே பாருங்க.

13. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..

14. டென்ஷன் இல்லாம, சரிவிகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்

தயவு செய்து இந்த பதிவையும் கடந்து போய் விடாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லுங்க..

ஆரோக்கியமா வாழுங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.