உங்க வீட்ட கறிவேப்பிலை மரம் நிக்குதா அப்போ இந்த நன்மையெல்லாம் பெறுவிங்க…!!!

0 165

வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா? அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலையில்தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.

கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து – கொட்டைப்பாக்கு அளவாவது – சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும். துவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம். கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி!

மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சைப்பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதைப் பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.