உங்களை சுற்றி பனை மரம் இருந்தால் நீங்களும் அதிர்ஷ்ட்டசாலி தான்..!

0 531

பனை பெரும்போலும் கடற்கரை ஓரங்களில் மணற்போங்கான நிலங்களில் தானாகவும், பயிரிடப்பட்டும் உற்பத்தி ஆகும். இது தென்னை போல வளையாமல் பொதுவாக செங்குத்தாகவே வளரும். பனையில் ஆண் பனை, பெண் பனை என இரண்டு வகைகள் உண்டு. இதில் பெண் பனைதான் அதிகப்படியான பலன்களைத் தரவல்லது.

பனை மரத்துப்போளையில் குருத்துப் பகுதியில் சீவி அதனின்று வடியும் சாற்றை சுண்ணாம்புத் தெளிவு நீர் கலந்து பதனீர் என்னும் பெயரால் போனையில் வைத்து காலை வேளையில் கூவி விற்பது உண்டு. அது குடிப்பதற்கு இளநீர் போல சுவையுடையதாகவும் உடலுக்கு குளிர்ச்சி தருவதாகவும் இருக்கும்.

பனையினுடைய இலை, மட்டை பூ, சாறு, நுங்கு, குருத்து, பழம், கிழங்கு வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன் உடையதாக விளங்குகின்றன. பனை இலை துவர்ப்பு சுவையுடையது என்பதால் வற்றச் செய்யும் தன்மை உடையது. காம வர்த்தினியாகவும் பயன் தரவல்லது. பனையில் உட்பகுதியில் அமைந்திருக்கும் நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது.

சிறுநீர் பெருக்கியாக உதவுவது, உள்ளழலை ஆற்றக்கூடியது. உடலுக்கு உரம் தரவல்லது. பனைமரத்தின் போளையின் ஒரு பகுதியில் மாலைப் பொழுதில் சீவி அதன் நீரைச் சேமிக்கும் வகையில் போனைகளைக் கட்டி வைப்பர். இந்த சாறு குடிப்பதற்கு இன்பமாயும், களைப்பைத் தீர்ப்பதாயும் இருக்கும்.

இச்சாற்றை சூரிய உதயத்துக்குப் பின் சிறிதுநேரம் வைத்திருக்க புளிப்பறிப் போகும். இதைக் கள் என்றும் சொல்லுவர். இது போதை தரக் கூடியது ஆகும். ஆனால் புதிதாக இறக்கப்பட்டு புளிப்பறாத பனஞ்சாற்றுடன் சுண்ணாம்புத் தெளிவு நீர் கலந்து பதநீர் என்னும் பெயரால் தெருவில் கூவிக் கூவி 50 ஆண்டுகளுக்கு முன் விற்பர்.

அதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி குடிப்பது உண்டு. அது உடல் சூட்டைப் போக்குவதாகவும், வயிற்றுப் புண்ணை ஆற்றுவதாகவும், வயிற்று வலியைப் போக்கக் கூடியதாகவும் உதவி வந்தது. மேலும் இது சிறுநீர் பெருக்கியாக இருந்து சிறுநீர் கோளாறுகளையும் போக்குவதாக விளங்கியது. பதனீர் வெட்டைச்சூடு, ஆகியவற்றைப் போக்கக்கூடியது. புளித்த சாற்றை நீரிழிவுக்கு கொடுப்பது வழக்கம்.

* புளிக்காத பதநீர் உடலுக்கு உரந்தர வல்லது. சீரண சக்தியைப் பெருக்கி உடலுக்கு ஊட்டச்சத்தாகவும் விளங்குவது. ஒரு செம்பு அளவு உள்ளுக்கு சாப்பிட மலச்சிக்கலையும் போக்க வல்லது. ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் பனைச்சாறு சாப்பிடுவதால் காசம் என்னும் எலும்புறுக்கி நோய் குணமாகும். நாட்பட்ட வயிற்றுப் புண், கிரந்திப்புண், தொண்டை நோய்கள், தோல் நோய்கள் முதலியனவும் தொலைந்து போகும்.

* பனையினுடைய பூக்கள் குன்மம், மூத்திரம் சம்பந்தமான நோய்கள், பல்வலி, பழைசூரம் அதாவது நீண்ட நாட்களாக விடாத காய்ச்சல் ஆகியவற்றை குணமாக்கும். பனங்குருத்து குருதி மூலத்தையும் கழிச்சலையும் உண்டாக்கும். பனஞ்சாற்றினின்று தயாரிக்கப்படும் கற்கண்டு தாகம், அம்மை உஷ்ணம், நீர்ச்சுருக்கு, மேகநோய் இவைகளைக் குணப்படுத்தும்.

பனங்கிழங்கு ஓர் நல்ல உணவாகவும் நலம் தரும் மருந்தாகவும் பயன்படுகின்றது. இதன் கிழங்கு நெருப்பிலிட்டோ, சுட்டோ, நீரிலிட்டு வேக வைத்தோ சாப்பிட சுவை உடையதாக இருக்கும். இனிப்பும், இளம் கசப்பும் துவர்ப்பும் கலந்த சத்துக்களை உள்ளடக்கிய ஓர் உன்னதப்பொருளாக பனங்கிழங்கு பயன் தருகின்றது. பனங்கிழங்கால் அஸ்தி சுரம் எனப்படும் எலும்புச்சூடு, போல்வினை நோய்கள், மேக ஒழுக்குகள் ஆகியவற்றைக் குணப்படுத்துவதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் அழகையும் உண்டாக்கும்.

பனம் பஞ்சை நசுக்கி காயங்களுக்குப் போட ரத்த ஒழுக்கை நிறுத்தும். பனங்காய் முதிர்ந்தால் கொட்டை கனத்துக் கடினமாகி மேற்சதைப் பகுதியும் நார் பகுதியும் பழுத்து மணமும், இனிய சுவையும் கொண்டதாக இருக்கும். இப்பழத்தை சுட்டோ, வேகவைத்தோ சாப்பிவது வழக்கம். பனம்பழம் மிக்க மந்தத்தை உண்டு பண்ணும். பனை ஓலையை விசிறியாக செய்து கோடை காலத்தில் பயன்படுத்துவர்.

* பனை மரத்துப்பட்டைத் தீ நீரோடு போறை உப்பு எனப்படும் கருப்பு உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஈறுகள் பலம் பெறுகின்றன. ஈறுகளின் வீக்கம் குறைகிறது. ஈறுகளினின்று ஏற்படும் ரத்தக் கசிவு காணாமல் போகிறது.

* பனஞ்சாறு (பூம் போளையைப் பிளந்து வடியும் சாறு) ஒரு ஊட்டச்சத்து தரும் டானிக்காக பயன்படுகின்றது. நீரைப் போக்கக் கூடியதாக உள்ளது. உள்ளுறுப்புகளைத் தூண்டி உன்னதமாகப் பணி செய்ய வைக்கிறது. மென்மையான மலமிளக்கியாக விளங்குகிறது. சளியை உடைத்துக் கரைத்து வெளியேற்றுகிறது.

* பனஞ்சாற்றைக் கொண்டு எடுக்கப்படும் பனைவெல்லம் (கருப்பட்டி என்றும் சொல்வர் ஈரல் கோளாறுகளைக் களைந்தெறிகிறது.

* பனஞ்சாற்றைக் காய்ச்சி புளிக்கச் செய்து புண்களின் மேற்பூச்சாக பூசுவதனால் நாட்பட்ட புண்கள் கூட ஆறி விடும்.

* பனம்பழம் மற்றும் நுங்குச்சாறு இவற்றைக் குழைத்து தனித்தனியாகவோ, ஒன்றாகவோ சேர்த்து மேற் பூச்சாக பூச தோல் நோய்கள் பறந்து போகும். மேலும் பனம் பழத்தினின்று வேர்வரை பல்வேறு போகங்களும் மண்ணீரல் மற்றும் ஈரல் வீக்கத்தை வற்றச் செய்யக் கூடியது ஆகும்.

* பனப்பூவைக் காயவைத்து எரித்து சாம்பலாக்கி சலித்து வைத்துக் கொண்டு அந்தி சந்தி என இரண்டு வேளை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கரைந்து போகும்.

* பூங்குருத்துக்களினின்று எடுக்கும் சாறு அமீபோ என்னும் நுண் கிருமிகளை அழிக்க வல்லது. கடுமையான நெஞ்சுச் சளியையும் கரைக்க வல்லது.

பனையும் கிராமப்புற மருத்துவ குணங்களும் :

* கிராமப்புற மருத்துவத்தில் இளம்பனையில் பகுதிகளை வாந்தியை நிறுத்தவும், குமட்டலைப் போக்கவும், சீதபதியை சீர்படுத்தவும், போல்வினை நோய்களைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.

* இளம்பனையின் வேர்க் கஷாயத்தை உள்ளுக்குக் கொடுப்பதால் வயிற்றிலுள்ள பூச்சிகள் ஒழியவும், சிறுநீர் கட்டை உடைக்கவும் குணப்படுத்தி ஆரோக்கியம் பெறுகின்றனர்.

* பனை வேர்க் கஷாயத்தை சுவாச அறைக் கோளாறுகளைப் போக்க பயன்படுத்துகின்றனர்.

பனை மரத்துப்பகுதிகள் மருந்தாகும் விதம்:

* பனங்காயினூள் இருக்கும் நுங்கினை மேல்தோலுடன் உண்ணுவதால் கழிச்சல், சீதக்கழிச்சல், வயிற்றுப்புண் ஆகியன ஆறும்.

* பதனீர் அல்லது பனங்கள் இரண்டுமே உடலுக்கு வன்மை தருவதும், ஆண்மையை அதிகரிக்கச் செய்வதும், உடல் உஷ்ணத்தைத் தணிக்கச் செய்வதும், வயிற்றுப்புண்களை ஆற்றக் கூடியதாகவும் அமையும். கள் மயக்கத்தைத் தரக் கூடியது. மதிமயங்கச் செய்யும் கள்ளைவிட பதனீரையே உண்ணுவது உடலுக்கும் மனதுக்கும் உன்னதப் பலன் தரும் என்பதில் ஐயமில்லை.

* வெயிற்காலத்தில் ஏற்படும் உடல் வெப்பம், அதனால் வருகின்ற நீர்ச் சுருக்கு, நாவறட்சி, தாகம், அம்மை நோய், மேக சுரம் ஆகியன தணியும்.

* பனை வெல்லத்தை நீரில் கரைத்து சிறிது ஏலக்காய் சேர்த்து போகைமாகக் குடிப்பதால் கோடைகால நீரிழப்பு குணமாகும். வாத, பித்த, சிலேத்துமம் என்னும் முக்குற்றத்தால் வந்த நோய்கள் மறைந்து போகும். நாவின் சுவையின்மை, வயிற்றுப் புண் ஆகியன குணமாகும்.

* பனை வெல்லத்தோடு நிலக்குமிழ் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியது) மற்றும் சுக்கு சேர்த்து தீநீர் காய்ச்சிக் குடிப்பதால் (அன்றாடம் காலையில்) காய்ச்சல், மந்தம், மாந்தம் (இரைப்பு), தோஷம், மேக ஒழுக்கு, ரத்த சோகை ஆகியன குணமாகும்.

* பனங்கிழங்கை நெருப்பிலிட்டு சுட்டு அல்லது நீரிலிட்டு சற்று உப்பிட்டு வேக வைத்து உண்ணச் சுவையாக இருக்கும். இதனால் உடலுக்கு ஊட்டம் ஏற்படுவதோடு உடற்சூடு, எலும்புச்சூடு, மேக நோய்கள் ஆகியன போகும்.

* காய்ந்த பனம்பூவை நெருப்பிலிட்டுச் சுட்டு வந்த சாம்பலை நீரில் இட்டு கலக்கி வைக்க தெளிவாக வரும் நீரை எடுத்து அடுப்பிலிட்டுச் காய்ச்ச உப்பு உரையும். இந்த உப்பில் சிறிதளவு உள்ளுக்குக் கொடுக்க சிறுநீரைப் பெருக்கும். வலப்போட்டீரல், இடப்போட்டீரல் என்னும் ஈரல் நோய்கள் குணம் ஆகும்.

* புளிக்காத கள் அல்லது பதநீரை ஒரு மண்டலம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட உடற்சூடு தணியும். வயிற்றுப் புண் ஆறும். மேக நோய்கள் மறையும். உடல் வலியும் பொலிவும் பெறும்.

* கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி தேங்காப்போல்,உப்பு சேர்த்து பிட்டவியல் ஆக்கி தினமும் உண்ண உடல் வன்மை உண்டாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.