இவை ராஜநாகம் என தமிழ்ப்படுத்தி தவறான பெயரில் குறிப்பிடப் படுகிறது..!

0 720

பாம்புகள் ஆபத்தானவகள் இல்லை…(பாம்புகளே ஆபத்திற்குள்ளாகிறது)நம்ம இந்தியாவிலும் வடகிழக்குஆசிய நாடுகளையும் தவிர உலகிலேயே வேறு எங்கும் காணமுடியாத ஒரு அழகான ஆபத்தற்ற பாம்பு என்றால் அது கருநாகங்கள் மட்டும்தான்….King kobra என்கிற ஆங்கிலப் பெயரை வழக்கம்போல ராஜநாகம் என தமிழ்ப்படுத்தி தவறான பெயரில் குறிப்பிடப் படுகிறது. நமது நாட்டில் கூட இவற்றை பரவலாக காணமுடியாது. தென்னிந்தியாவை பொறுத்தவரை குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஈரப்பாங்கான குளிர்ந்த, அடர்ந்த வனப் பகுதிகளிலும் அதுபோன்ற காபி தேயிலை தோட்ட பகுதிகளில் மட்டுமே அரிதாக காணப்படும் பாம்புகளில் இது முதன்மையானது….நிலத்தில் கூடுகட்டி சுமார் இரண்டு மாதங்கள் வரை முட்டைகளை உணவின்றி அடைகாக்கிற பாசமிகுந்த பாம்பு இதுமட்டும்தான் எனச் சொல்லலாம். நச்சுள்ள பாம்புகளில் இது நீளமானது சராசரியாக மூன்று முதல் ஐந்து மீட்டர் நீளமுள்ளவை…பாம்புகளை மட்டுமே முதன்மை உணவாக எடுத்துக் கொள்ளும் இந்தத் தாய்ப்பாம்புகளுக்கு தெரியும்; இரண்டு மாத காலம் உணின்றி உள்ள தம்மால் குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவரும்போது தம்மால் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியாதென்று. அதனால் முட்டைகள் வெளிவரும் தருணத்திற்கு சற்று முன்னரே அங்கிருந்து எட்ட நகர்ந்துவிடும். தன் இனம் காத்து பரவிட வைக்கும் உந்துதலால் இந்த அறிவை அதனுள் முன்னேற்பாடாக வைத்துள்ளது பரிணாம வளர்ச்சியின் படிநிலை…இப்படிப்பட்ட அற்புதமான உயிரினம் அற்பமனிதர்களின் சாகச புத்தியாலும், விளம்பர மோகத்தாலும் மிக மோசமான நிலைக்கு தொடர்ந்து உள்ளாகிக் கொண்டே இருக்கின்றன. சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னரே இதுபோன்ற இற்பமான செயல்கள் தொடர்ந்து நடப்பது குறிப்பிடத் தக்கது. IUCN னின் சிவப்பு பட்டியலில் உள்ள இவற்றை. எண்ணிக்கையில் மேலும் ஆபத்தான அஞ்சும் அளவிற்கு கொண்டு சேர்த்துவிடும்போல் இருக்கிறது…இப்படியே போனால் நமது பேரப்பிள்ளைகளுக்கு காகித படங்களில்தான் இவற்றை காண்பிக்க முடியும்…மனிதர்களை எளிதில் தாக்க முற்படாமல், மனிதர்களைத் தவிர்த்து விலகியே இருக்க விரும்பும் இவற்றின் மீது சமீபத்தில் ஒரு வன்மம் நடந்திருக்கிறது…கூடலூரிற்கு அருகில் சேரம்பாடி தேயிலைத் தோட்ட பகுதியில் ரோட்டில் கருநாகத்தை கண்ட சில இளைஞர்கள் அதை மோசமாக கையாண்டு பிடித்து. படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். உறுதியாக அந்தப் பாம்பு உயிரோடு இருக்க வாய்ப்பில்லை….இதற்கெல்லாம் மூல காரணம் வாவா சுரேஷ் போன்ற வெறும் கைகளால் பாம்புபிடித்து விளம்பரமாக்கிக் கொள்கிற சாகசக்காரர்களின் செயல்கள்தான். இந்த இளைஞர்களையும் இப்படி செயல்பட வைத்திருக்கிறது…வனத்துறை மட்டுமே அனைத்தையும், அனைத்து இடங்களிலும் பாதுகாத்திட முடியாது. செயல்படவும் முடியாது. அதற்கான திறமையுள்ளவர்களும் அங்கே மிக மிக குறைவு. இதுபோன்ற உயிரினங்களை வெறும் கைகளில் பிடிக்காமல், கவனமாக கருவிகள் துணைகொண்டு பிடித்து பாதுகாப்பான இடங்களில் விட ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு தகுதியானவர்கள் மூலம் பயிற்சி கொடுத்து பயன் படுத்திக் கொள்ளலாம்….இதை முறைப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற திடீர் பாம்பு பிடிப்பவர்களிடமிருந்து பாம்புகளையும், பாம்புகளிடமிருந்து இவர்களையும் காப்பாற்ற முடியும்…வாய்ப்புள்ள போது இதுபற்றி மீண்டும் பேசுவோம்.கேள்விகளையும் கருத்துகளையும் மறவாமல் வையுங்கள். அடுத்த பதிவில் சந்திக்கும் வரை,Ramamurthi Ram(கூடலூரிலிருந்து தகவல் கொடுத்து உதவிய நண்பரிற்கு நன்றி)

You might also like

Leave A Reply

Your email address will not be published.