இல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது..!

0 731

இல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என நிரூபிக்க முடியாது அது குறித்த ஆய்வுகளை மூடிய இந்தியா, கீழடியைப் புதைத்த இந்தியா, ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகளை, கல்வெட்டுகளை படிக்காமல் அழிய வைக்கும் இந்தியா… இப்படி பல மோசடிகள், திரோகங்கள், குழிபறிப்புகள் இவைகளுக்கிடையே தான் நம் வரலாறுகள் தனி ஆர்வலர்களால், இடைவிடாத அழுத்தங்களால் வெளிப்படுகின்றன.
——————————————————————-

‘கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் கிடைத்த இந்த முடிவுகளைக் கொண்டு தான் ‘கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது.’

அதை வெளியிட்டதே அப்போது மத்திய கலாச்சார இணையமைச்சராக இருந்த மகேஷ் சர்மா தான்.
(தொல்பொருள் ஆய்வில் இன்னும் தொடரும் போது இன்னும் பழமையான சான்றுகள் கிடைக்கும்.ஆனால் அதை தடுக்கிறது இந்தியா. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வேண்டாவெறுப்பாக தொடர்கிறார்கள்)

இராகிகரி, ஹரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்டத்தில் இருக்கிறது. டாக்டர். வசந்த் ஷிண்டே தலைமையில், 2015ல் நடந்த அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் பல தாமதங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த முடிவினை ஒட்டிய இணைய செய்திகளின் தலைப்பே “இராகிகரியில் கிடைத்த 4500 ஆண்டுகள் பழமையான டிஎன்ஏ பிரதிபலிப்பு இந்துத்துவ தேசியவாதிகள், அந்த காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை” என்பது தான்.

அந்த டிஎன்ஏ மாதிரிகளில் இருக்கும் ஜீன்களின் தன்மையும், தற்போதைய காலத்தில் வாழும் ஒரு பகுதி இந்தியர்களின் ஜீன்களின் தன்மையும் ஒத்துப்போகின்றது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், அந்த ஜீன் ஒற்றுமை திராவிடர்களின் ஜீனோடு தான் ஏற்படுகின்றது. அதாவது குறிப்பாக தென்னிந்தியர்களுடன் தான் ஒற்றுப்போகின்றது எனலாம், என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், இந்திய அளவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தான், 2017 லிருந்து வெளியிடாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி டாக்டர். வசந்த் ஷிண்டேவின் தலைமையில் தான். அவரிடம் இத்தனை நாட்கள் அதனை மறைத்து வைத்திருப்பதற்கு டாக்டர். வசந்திடம் கேட்டதற்கு, இது அரசியல் ரீதியாக சர்ச்சைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு என்பதால் வெளியிடவில்லை என்றார். ஆனால் இப்போது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பு தேசமெங்கிலும் பலரை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது எனலாம்.

மேலே குறிப்பிட்ட டிஎன்ஏ ஆராய்ச்சி முடிவின் தெளிவான அறிக்கையில், 4500 ஆண்டுகள் பழமையான மனித எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ தன்மைகள் சரியாக ஒத்துப்போவது, இன்றைய தினத்தில் தமிழகத்திற்குட்பட்ட நீலகிரி மலைத்தொடரில் வாழும் பழங்குடியினர்களில் ஒரு பிரிவினரான இருளர்களோடு ஒத்துப்போவதாக தெரிவிக்கின்றது.

குறிப்பாக இந்த இராகிகரி அகழ்வாராய்ச்சி முடிவு, சிந்து சமவெளி நாகரிகம் பற்றி வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்ததை நம்மால் மறுக்க முடியாது.

இதே இராகிகரியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக ஆய்வு செய்ய பூமியைத் தோண்டி, இரண்டு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பிறகு முற்றிலுமாக மூடப்பட்டது. அந்தப்பகுதி சரியாக ஹிசார் மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்களாகிய இராகி ஷா மற்றும் இராகி காஸ்-க்கு இடையில் உள்ள ஒரு மண்மேடு. இப்போது அங்கு ஆள் நடமாட்டம் சிறிதுமில்லை. அதுமட்டுமில்லாமல், தற்போது அந்த இடத்தில் மாட்டு சாணங்கள் குவியல் குவியல்களாக வைக்கப்பட்டிருக்கிறது. கூடவே ‘வாட்ச் டாக் ஹெரிடேஜ் ஃபண்ட்’ உலகின் ஆபத்தான 10 பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ல் இந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற மாணவக்குழு சந்தேகத்துடன் அந்த இடத்தை தோண்ட முற்பட்டனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இறுதியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு தோண்டப்பட்ட இடங்களை மூடும்போது, சில இடங்களை குறித்து வைத்தனர். அத்தகைய குறியீடுகள் அழிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாயினர் அந்த மாணவர்கள்.

2012ல் வந்த செய்திகளின்படி, அந்த இராகிகரி பகுதியை பல வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பார்க்க விரும்புவர். அதுமட்டுமல்லாமல், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கலைப்பொருட்களை அவர்கள் 50 ரூபாய்க்கு ஒன்று, 100 ரூபாய்க்கு ஒன்று என்கிற கணக்கில் வாங்கிச்செல்வர். அந்த கலைப்பொருட்களை இவ்வளவு மலுவு விலைக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது விசித்திரமான ஒன்று தான்.

பின்வரும் இணைப்பிலிருந்து. முழுவதுமாக நமக்கு உடன்பாடில்லையெனினும் சில தகவல்களுக்காக.

https://roar.media/tamil/main/history/comparing-keezhadi-and-rakigarhi-archeological-findings/

You might also like

Leave A Reply

Your email address will not be published.