இன்று என்ன தினம் தெரியுமா..? நமக்கு காதலர் தினமெல்லாம் தெரியும் இதெல்லாம் தெரியவா போகுது..?

0 421

திக்கெட்டும் தேடினேன்
என் தாய்தமிழ் மொழி போல
இனிமையான அழகான ஆழமான மொழியை எங்கும் காணேன்…

செம்மொழியான தமிழ் மொழியே!!!

தாய்மொழி என்றால் என்ன?

ஒருவன் எந்த மொழியில் சிந்திக்கிறானோ அதுவே அவனது தாய்மொழியாகும்.

இன்று உலக தாய்மொழிதினம். தாய்மொழியின் முக்கியத்துவம் அதனுடன் தொடர்புடைய தாய்மொழிக்கல்வி பற்றியும் இக்கட்டுரை கூறவிளைகின்றது.

மொழி ஒரு கருவி. மனிதன் மொழிகொண்டுதான் வாழ்கின்றான். மொழியால் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றான். உலகில் 4000-5000 மொழிகளிருப்பதாக ஆய்வுநிலை மொழிநூல்கள் கூறுகின்றன.

ஒருவன் சிறுவயதில் கற்றுக்கொண்டதும் சிந்திக்கவும் கருத்துக்கள பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உகந்ததும் தாய்மொழி எனலாம்.

ஒருவரின் தாய்மொழி தனது பெற்றோரின் மொழியா? அல்லது தனது தாயின் மொழியா? என்பதில் சிக்கல் உள்ளது. எமது தாய் மொழி தமிழ். எமது புலம்பெயர் வாழ்வில் பிறந்த பிள்ளைகளுக்கும் தமிழ்தான் தாய்மொழியா?

புலம்பெயர் வாழ்வில் தாய்மொழி எது என்பதை வரையறுப்பதில் சிக்கல்கள் உள்ளன.

ஒருவரின் தாய்மொழி என்பது அவரின் பெற்றோரின் தாய்மொழியாக எப்போது அமையுமெனின் அவரின் பெற்றோரின் தாய்நாட்டில் அவர் வாழும்போதும் அல்லது அவரின் தாய்நாட்டுமொழி மற்றொரு நாட்டுமொழியாக இருக்கும்போதுமேயாகும்.

ஒருவன் தன்கருத்துக்களை முதன்முதலில் வெளியிடப்பயன்படுத்தும் மொழி அவனின் தாய்தந்தையரின் மொழியாக இருக்கவேண்டுமென்பதில்லை. முதன்முதல் அவன் பேசக்கற்றுக்கொண்ட மொழியாகவும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில் குறிப்பிட்ட சில காரணங்களினால் ஒரு மனிதன் முதன்முதலில் பேசப்பழகிய மொழியை முற்றாக மறந்துவிடவும்கூடவும். எனவேதான் பெற்றோரின் தாய்மொழி பிள்ளைகளுக்கு வேற்றுமொழியாகஅமையலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.