இது அனைத்தும் நடைபெற நாம் வீதியில் இறங்கி போராட வேண்டிய அவசியமில்லை.

1 299

இது மண்ணையும் மக்களையும் காக்கும் எளிய போராட்டம்.

பன்னாட்டு பற்பசை தவிர்த்து உள்ளூர் பற்பொடி பயன்படுத்துவம் போராட்டமே.

இரசாயன சோப்புகளை தவிர்த்து குளியல் பொடிகளை பயன்படுத்தும் போராட்டமே.

ஷாம்புகளை தவிர்த்து அரப்பு சிகைக்காய் பொடி பயன்படுத்தும் போராட்டமே.

தேயிலை, காபிகளை தவிர்த்து மூலிகைத்தேனீர், சுக்கு மல்லி காபி பயன்படுத்துவதும் போராட்டமே.

இரசாயன விளைப்பொருட்களை தவிர்த்து இயற்கை விளைப்பொருட்களை பயன்படுத்துவதும் போராட்டமே.

பன்னாட்டு அழகு சாதன பொருட்களை தவிர்த்து உள்ளூர் இயற்கை பொருட்களை பயன்படுத்துவதும் போராட்டமே.

இரசாயன துணி துவைக்கும் மற்றும் பாத்திரம் கழுவும் பொடி தவிர்த்து இயற்கை பொடிகளை பயன்படுத்துவதும் போராட்டமே.

வெளிநாட்டு கழிவறை அமிலம் மற்றும் வீடு துடைக்கும் திரவத்தை தவிர்த்து இயற்கை திரவத்தை பயன்படுத்துவதும் போராட்டமே.

பாக்கெட் மற்றும் சீமை மாட்டுப்பாலை தவிர்த்து நாட்டுப்பசும்பாலை பயன்படுத்துவதும் போராட்டமே.

பொடி மற்றும் ஐயோடின் உப்புகளை தவிர்த்து கல் மற்றும் இந்துப்புகளை பயன்படுத்துவதும் போராட்டமே.

பிராய்லர் கோழிகளை மற்றும் இதன் முட்டைகளை தவிர்த்து நாட்டுக்கோழி, இதன் முட்டைகளை பயன்படுத்துவதும் போராட்டமே.

பட்டை தீட்டப்பட்ட அரிசியை தவிர்த்து பட்டை தீட்டப்படாத அரிசியை பயன்படுத்துவதும் போராட்டமே.

பிராண்டடு மசாலாக்களை தவிர்த்து வீட்டில் அரைத்த மசாலா பொடிகளை பயன்படுத்துவதும் போராட்டமே.

குக்கர் சோற்றை தவிர்த்து வடித்த சோற்றை பயன்படுத்துவதும் போராட்டமே.

நான் ஸ்டிக் பாத்திரங்களை தவிர்த்து மண், கல், இரும்பு, பித்தளை, சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவதும் போராட்டமே.

பூஸ்டு, ஹார்லிக்ஸ், போன்விட்டா தவிர்த்து சிறுதானிய சத்து மாவு பயன்படுத்துவதும் போராட்டமே.

வெளிநாட்டு குளிர்பானம், ஐஸ்கிரீம்களை தவிர்த்து இளநீர், மோர், நுங்கு, பதநீர் பயன்படுத்துவதும் போராட்டமே.

சாக்லேட்டை தவிர்த்து பனங்கருப்பட்டி இனிப்புகளை பயன்படுத்துவதும் போராட்டமே.

வெள்ளை சர்க்கரை தவிர்த்து பனங்கருப்பட்டி, கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதும் போராட்டமே.

மைதா தவிர்த்து சிறுதானிய மாவுகள் பயன்படுத்துவதும் போராட்டமே.

ரீப்பயிண்டு ஆயில் தவிர்த்து செக்கு எண்ணெய் பயன்படுத்துவதும் போராட்டமே.

பில்டர், ஆர்.ஓ, மினரல் தவிர்த்து பச்சை தண்ணீர் பயன்படுத்துவதும் போராட்டமே.

இரசாயன கொசுவிரட்டிகளை தவிர்த்து இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்துவதும் போராட்டமே.

தலைக்கு பிரான்டடு வெளிநாட்டு எண்ணெய்களை தவிர்த்து உள்ளூர் மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவதும் போராட்டமே.

Hybrid தானியம், பழங்கள், காய்கனிகளை தவிர்த்து நாட்டு ரக விளைப்பொருட்களை பயன்படுத்துவதும் போராட்டமே.

முடிந்த அளவு வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து உள்ளூர் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நமது செல்வம் பன்னாட்டு கொலைகார வியாபாரியிடம் செல்லாமல் நமக்குள்ளேயே சுழற்சியில் இருக்கும், இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

வெளிநாட்டு நச்சுப்பொருட்கள் விற்பனை ஆகாததால் பன்னாட்டு கொலைகார வியாபாரி தனது கடையை இழுத்து மூடிவிட்டு சென்றுவிடுவான். நமக்கு எதிராக வகுக்கப்படும் அழிவுத்திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும்.

மக்களுக்கு நல்ல தரமான பொருட்கள் கிடைக்கும், இதனால் மக்கள் நோய்களில் இருந்து விடுதலை அடைவர்கள். மீண்டும் இம்மண்ணில் மக்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வு மலரும்.

இனி போராட்டம் வீதியில் மட்டுமல்ல
வீட்டிலும் துவங்குவோம்.

நம் மண்ணையும் மக்களையும் காப்போம்.

 

அனைத்திற்கும் பிறரை குறை சொல்லும் நாம், எப்பொழுது மாறப்போகிறோம் ? நாம் மாறாமல் இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

மாற்றத்தை நம்மில் இருந்து துவங்க வேண்டும்.

புறக்கணிப்போம் வெளிநாட்டுப் பொருட்களை.
பயன்படுத்துவோம் உள்ளூர் பொருட்களை.

என்ன நண்பர்களே நீங்கள் போராடத் தயாரா ?

நன்றி இரா.மதிவாணன்

You might also like
1 Comment
  1. சதீஷ்குமார் says

    துணி துவைக்க, பாத்திரம் கழுவ இயற்கையான பொடி பற்றி ஆலோசனை தாருங்கள் !!

Leave A Reply

Your email address will not be published.