இதுவே அமெரிக்காவில் நடந்திருந்தால் தமிழனுக்கு ஆச்சரியமாக இருந்திருந்திருக்கும் ஆனால் இது நடந்தது..?

0 348

திருமலாபுரம் பள்ளியில் இயற்கை விவசாயம் செய்தது விளைந்த காய்களுடன் மாணவா்கள் நன்றி தலமை ஆசிாியா்க்கும் உதவி ஆசிாியா்களுக்ம் நன்றி நன்றி
கன்னியாகுமரி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்களும் இதை செய்தால் விவசாயம் மீது மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பு உருவாகும்.

பள்ளியில் விளையாட்டு அவசியம் என்று கூறும் நம்மில் பலருக்கும் விவசாயம் அவசியம் என்று ஏன் தெரிவதில்லை..?
ஒருவேளை விவசாயம் அவசியம் என்றால் பெருநிறுவனங்களின் வியாபார யுக்தி பாதிக்கப்பட்டுவிடும் என்ற பயமா..?
அரசுபள்ளி ஆசிரியர்களே விவசாயத்திற்கு தினமும் அரை மணிநேரம் ஒதுக்கி உழவு பழகுங்கள் ஏனென்றால் நாளை உண்ண உணவு அவசியம்..!

உழவுத் தொழில் அல்லது விவசாயம் என்பது ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு  விலங்குகளும் தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள்தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல், கால்நடைகள் வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசுநிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.

 பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வேளாண்மை செய்துவந்துள்ளன. வரலாற்றில், வேளாண்மையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகள், பண்பாடுகள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றைச் சார்ந்து மாறுபட்டும் இருந்துள்ளது. எனினும், விலங்குகளையும் தாவரங்களையும் பழக்கப்படுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர நிலத்தைப் பண்படுத்துவதற்காக, பல நிலையிலான தொழில்நுட்பங்களையே வேளாண்மை நம்பி இருந்துள்ளது. தாவரங்களைப் பயிர் செய்ய நீர்பாசனம் தேவை. தரிசுப் பயிர்முறையும் உள்ளது. விலங்குகளை வளர்க்க புல்வெளிகள் தேவை. வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப வேளாண்மைமுறை மேலோங்கியதால் “ஓரினச் சாகுபடி” (monoculture) பரவலாகியுள்ளது.

எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக “நிலைகொள்வேளாண்மை” (permaculture) மற்றும் “உயிரிவேளாண்மை” (organic agriculture) என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. வேளாண்மையைப் பற்றிய ஆய்வை வேளாண் அறிவியல்என்கிறோம். வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு தோட்டக்கலை எனப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.