இதுதான் விளம்பர உத்திகள்..! தமிழ் இலக்கணத்தை வைத்து தமிழனையே ஏமாற்றுகிறது..!

0 669

விளம்பர உத்திகள்

விளம்பரங்கள், விற்பனையைப் பெருக்குவதற்காகவும், புகழ், பெயர், மக்கள் நன்மை, நுகர்வோர் நலன் போன்ற பல காரணங்களுக்காகவும் இதழ்களில் வெளியாகின்றன. அந்தந்த நேரத்திற்கேற்பப் பலதரப்பட்ட வயதினரையும் கவரும் வகையில் விளம்பரங்கள் வருகின்றன. நுகர்வோர் யார் என்பதையும் மனத்திற்கொண்டே விளம்பர உத்தியும் நடையும் பயன்படுத்தப்படுகின்றன.

உத்திகள்

விளம்பரங்கள், தகவல்களைப் பொதுவாக ஆணித்தரமாக அழுத்திச் சொல்வதை ஓர் உத்தியாகக் கையாள்கின்றன.

எடுத்துக்காட்டு:

உடனடி நிவாரணமளிக்கிறது
பரிபூரண சக்தி
முழுமையான வெண்மை
அதிரடித் தள்ளுபடி.

லைப் பாய் எவ்விடமோ ஆரோக்கியமும் அவ்விடமே’ ‘ஹமாம் பாதுகாப்பளிக்கிறது’
‘மணம், நிறம், திடம் நிறைந்த திரி ரோஸஸ்’
‘வலுவான பற்களுக்கு கோல்கேட்’

சுருக்கம்

சில விளம்பரங்கள் பொதுவாகச் சில வார்த்தைகளில் சுருக்கமாக அமையும்.

எடுத்துக்காட்டு:

வாழும் காலத்திலும், வாழ்க்கைக்குப் பிறகும் எல்.ஐ.சி
Connecting People – Nokia
நாம் இருவர், நமக்கு ஒருவர் Made for each other – Wills
கொசுக்களின் எமன் – All out

Complete Man- Raymonds

விளம்பரங்கள் சில சமயங்களில்முரண்தொடை உத்தியைக் கையாளுகின்றன.

குறைந்த விலை நிறைந்த சுவை
World’s Local Bank HDFC

பின்னோக்கி அடித்து முன்நோக்கிச் சென்றவன் (மார்க்கோபோலோ)

தொடர்புடைய சொல், கருத்து

விளம்பரங்கள் பொதுவாக, தொடர்புள்ள சொல், கருத்து ஆகியவற்றைக் கொண்டு வருகின்றன.

இனிய சுவை உதயம், புதிய சன்ரைஸ்

இவ்வாறு, விளம்பரங்கள் நுகர்வோரைவரையறைப்படுத்தி வெளியாகின்றன.

கவரும் வகை

குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்கள் தாய்மார்களைக் கவரும் வகையில் உள்ளன.

எடுத்துக்காட்டு:

ஜான்சன் & ஜான்சன் பொருள்கள்
விப்ரோ
செரலாக்ஸ்,
லாக்டோஜன்
உட்வர்ட்ஸ்
காம்ப்ளான்

பயன்படுத்தும் பொருள்

பெரியவர்கள் பயன்படுத்தும் பொருள் குழந்தையை வைத்து விளம்பரப்படுத்தப் படுகின்றது.

எடுத்துக்காட்டு: ஹூடி பாபா

நாட்டுப்பற்று

சில பொருட்கள் தாய்நாட்டுப்பற்று அடிப்படையில் விளம்பர உத்தி கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டு:

ஹமாரா பஜாஜ் (Hamara Bajaj)
சியாராம்ஸ் (திரும்பி வா நீ)
ASHO TEX – Washing Machine Very very Indian very very good

என்று ஜப்பானியர் சொல்வதாக அமைவது.

Connecting India – B.S.N.L

இதுபோல் எத்தனையோ உத்திகள், நடைகள், விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

அடிப்படை இது இனி மேலும் தெளிவாக விவரிக்கிறோம்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.