இதற்கு மேல் அங்கே என்ன நடந்தாலும் நான் எந்த வினையையும் வெளிப்படையாக நிகழ்த்தப் போவதில்லை…

0 319

கருப்புக் கண்ணாடிக் காரர் காமராஜருக்கு ஏன் அப்படி செய்தார் இந்திராகாந்தியை ஏன் அப்படி விமர்சனம் செய்தார் என்பவர்களுக்கு, அவர்கள் இருந்தது பொது வாழ்வில். அப்படி நடந்து கொள்வதும் பேசுவதற்கும் ஒற்றைக் காரணம் “அரசியல்”

அதுபற்றியெல்லாம் இங்கேதான் கூவுவோம், குதிப்போம், கோபப்படுவோம். நாகரீகமற்ற வார்த்தைகளுடன் நமது தரத்தை நாமே குறைத்துக் கொள்வோம். தேர்தலன்று, சரியாக “திருவிழா மனப்பான்மைக்கு” வந்துவிடுவோம். சிந்திக்க மாட்டோம். தலைவனை கோடம்பாக்கத்திலிருந்துதான் மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்போம்…

காமராஜருக்கு ஏன் அப்படி நடந்தது எனப் பேசும் நாம். நமக்கேன்
அரசியல்வாதிளால் அப்படி நடந்தது ?
சமூகத்திற்கு ஏன் இந்த நிலை ? என ஒருநாளாவது பேசியிருப்போமா ?
அப்படிப் பேசியிருந்தால் காமராஜரைவிட நல்ல தலைவர் நம்மிடையே வந்திருப்பார். அரசியல் வேறு நமது வாழ்க்கை முறை வேறு எனப் பார்ப்பதாலேயே. இன்னும் அரசியல் நம்மிடையே பொழுது போக்காகவும், சடங்காகவுமே இருக்கிறது. அதனால்தான் மூனுபேரு முடிவுசெய்பவன் ஏழுபேரை ஆட்சி செய்கிறான்…

நான் இப்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்திக் கொள்கிறேன்….
ஒரு இருபதாண்டுகளுக்கு முன்னர் நான் செயல்பட்ட கட்சியின் தலைவர் இறந்துவிட்டார். என்கிற அடிப்படையில்தான் நேற்றைய அந்த இரங்கல் பதிவினை செய்தேன்.
அதை பலர் முழுமையாக படிக்கவேயில்லை. இறுதிவரை படித்திருந்தால் இப்போதைய எனது நிலையை தெளிவாக அறிந்திருப்பார்கள். இதற்கு மேல் நாகரீகமாக இங்கே எதாவது சொல்ல வேண்டுமானால் சொல்லுங்க உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அரசியலை இங்கே கொட்டி நாறடிக்காதீர்கள்…

யாரும் இங்கே அரசியல் பாடம் எடுக்க வேண்டாம் நான் தெளிவாகவே இருக்கிறேன்…
அரசியல் அறிவுக்கு வாட்சாப்களை மட்டும் நம்பிக்கொண்டிராமல். நிறைய படியுங்கள். கட்சி அரசியல் மட்டும் அரசியல் இல்லை. முதலில் நாம் தெளிவடைவோம். நாட்டையும் பூமியையும் சீரடைய வைப்போம்…

இதற்கு மேல் அங்கே என்ன நடந்தாலும் நான் எந்த வினையையும் வெளிப்படையாக நிகழ்த்தப் போவதில்லை…

அடுத்த பதிவில் வழக்கம்போல நமது அடுத்த தலைமுறை வாழ பூமியை சீரழிக்காமல் இருப்பதுபற்றி பேசுவதை தொடர்வோம். நன்றியுடன்,

பதிவு : Ramamurthi Ram

You might also like

Leave A Reply

Your email address will not be published.