இங்கு வந்துசேர இவற்றிடம் , ‘காம்பஸ்’,’ஜீ .பீ.எஸ்’ இவை ஏதும் இல்லை பின் எப்படி வந்து சேர்ந்தன இங்கு..?

0 252

இயற்கை

ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி
இடைப்பகுதி தொடங்கி
பங்குனி முடியும் வரை
எங்கள் வேடந்தாங்கல்
ஏரி நீர் நிரம்பி வழிய
ஏரியின் சிறிய தீவுகளில்
மரங்கள் செழுத்து வளர்ந்திருக்க
இந்திய எல்லைகள் தாண்டி
ஆயிரம் ஆயிரம் மையில்களுக்கு அப்பாலிருந்து
சிறகால் பறந்தே இங்கு வந்தடைகின்றன
வித விதமான புள்ளினங்கள்
இவற்றிற்கு இங்கு வந்துசேர
இவற்றிடம் , ‘காம்பஸ்’,’ஜீ .பீ.எஸ்’ இவை
ஏதும் இல்லை
பின் எப்படி வந்து சேர்ந்தன இங்கு..?

இன்று நான் என் காரில்
அங்கு சென்று இந்த பறவைகளின்
அழகைப்பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன்
எனக்கு வழிகாட்ட, என்னிடம் ‘ஜீ.பீ.எஸ்.!
வழிநெடுக சைன்-போர்டு சாலைகளில்,
மற்றும் பேசி தெரிந்துக்கொள்ள ஆட்களமுண்டு

இந்த புள்ளினங்களுக்கு யார் வழி காட்டி?
அவை எப்படி இங்கு வந்தடைகின்றன, அதுவும்
வருடம் தவறாது பருவத்தில்!

என்னே விந்தைதரும் இந்த இயற்கை !

You might also like

Leave A Reply

Your email address will not be published.