ஆண்கள் பெண்கள் அனைவருக்கு ஒன்றானது ஆவாரம் பூ..! அதில் என்ன விசயம்..?

0 986

“வணக்கம் பாட்டி, எப்படி இருக்கீங்க?” என்று பாட்டியின் குடிலுக்குள் மெதுவாக நுழைந்தேன்; மஞ்சள் நிற மலர்கள் பரத்திக் கிடக்க ஏதோ கை மருந்து செய்துகொண்டிருந்தவள் “நேக்கென்னடா குறைச்சல்?! நன்னா இருக்கேன். ஆமா… நீ ஏன் டல்லா இருக்க? சுகர் கிகர் வந்திருக்கான்னு போய் செக் பண்ணு போ!” என்றாள் கிண்டலாக. ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும். “அப்படியெல்லாம் ஒண்ணும் வராது பாட்டி, நீங்க வேற சும்மா பயமுறுத்தாதீங்க! இப்போதான் எனக்கு கொஞ்சம் டவுட் வர்றது” என்றேன். உண்மையில் எனக்கும் கொஞ்சம் டவுட் இருக்கத்தான் இருந்தது. “பயப்படாதேடா…! இந்த ஆவாரம் பூ இருக்குதில்ல?!” என்று அவள் இழுத்துப் பேச, நான் இடைமறித்து “எது இதுவா?” என பரத்திப் போடப்பட்டிருந்த அந்த பூக்களைக் காட்டிக் கேட்டேன். “ஆமா… இதுதான் ஆவாரம் பூ. “நீரிழிவு” நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்துடா. ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.

அப்புறம்… ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும். ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலயும் மருத்துவ குணம் இருக்கு.” இப்படி, ஆவாரம்பூ பத்தி உமையாள் பாட்டி ஆதி முதல் அந்தம் வரை வெளுத்து கட்ட, அவளது பட்டறிவைக் கண்டு வியந்தபடி பார்த்திருந்தேன். மதொடர்ந்து பேசிய பாட்டி ஆவாரை பத்தி பேசி சங்க காலம் வரைக்கும் சென்றுவிட்டாள். ‘ஆவிரை’ னு அந்தக் காலத்தில சொன்னத இந்த காலத்தில ஆவாரம்பூன்னு சொல்றாங்க. தைப்பொங்கல் அன்னிக்கு காப்புக் கட்டுவதுக்கும், மாட்டுப்பொங்கல் அன்னிக்கு மாடுங்களுக்கு மாலை கட்டுறதுக்கும், வீடிகளுக்குத் தோரணம் கட்டுறதுக்கும் ஆவாரம்பூவ இப்போ பயன்படுத்துறாங்க.

சங்க காலத்தில மடல்-மா ஏறி வரும்போது பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கலப்போ மட்டும் பயன்படுத்துற பூவா மாறிருச்சு.” பாட்டியின் வைத்தியத்தை வரும் நாட்களில் தொடர்ந்து கேட்போம்! சிறப்பு குறிப்பு இந்த ஆவாரைத் தாவரத்தில் Sennapicrin என்னும் Cardiac glucoside உள்ளது. ஆவாரை உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.