ஆண்களே விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டுமா?

740

மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம். மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.

பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.

மது அருந்துவதை நிறுத்துங்கள். மது அருந்துவதால் பாலியல் திறனுடன் நேரடியாக தொடர்புடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.

உடலை ஆரோக்கியமாக, வைத்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அதிகமாக செய்ய வேண்டாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு என்ற பழமொழி உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.
எவ்வளவு நேரம் தூங்குகிறோம்

என்பதற்கும், கருவூட்டும், கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.

தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனபெருக்க திறன் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திற்குமட்டுமல்ல, இனப்பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.