ஆண்களுக்கு பிறப்புறுப்பில்(ஆண்குறி) தொற்றும் பலவகையா நோய்கள் என்னென்ன..? கவனமாய் இருங்கள்..!

5,690

ஆண்குறி நோய்களும் அறிகுறிகளும்

1) வாத ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் : 1.ஆண்குறி துவாரம் அடைபட்டு,பலவிதமான வேதனைகள் உண்டாகும்.
2.அரிப்பு,
3.எரிச்சல்,
4.குருகுருப்பு,
5.அழல் (வெப்பம் ),முதலியன தோன்றும்.
6.பருப் போன்று கட்டிகள் உண்டாகும்.
7.விஷக்கடியால் ஏற்பட்ட நோய் போன்று தோன்றும்.
8.உடல் அழகுக் கெட்டு தேகம் நலிந்து மெலிந்துவிடும்.

2) பித்த ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.ஆண்குறி சிவந்து காணும்.
2.குறி வீக்கத்துடன்,கடுப்பு,காய்ச்சல் தோன்றும்,
3.உடலுறவில் மிகுந்த ஆசை எழும்,
4.இந்நோய் மாறுவது கடினம்.
மருந்துகள் செய்து கொடுத்தாலும் இந்த நோய் தீருவது கடினம்.
சில் விஷம் போல் உடலில் உணர்வு தோன்றும்.

3) சிலேத்தும ஆண்குறி.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.ஆண்குறி தடித்து கனத்து மினு மினுப்புடன் வீங்கி காணும்.
2.விதைப் பைகள் வீக்கத்துடன் காணும்,
3.ஊரல் ,சொறி ஏற்படுவதுடன் இருமல் காணும்.
4.வயிறு பொருமல்,பரு,பிளவை எழும்.
5.உடலில் விஷம் ஏறினால் போல பல குணங்களை காட்டும்.

4) திரி தோஷ ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.ஆண்குறியில் வாதம் தங்கி நாளுக்கு நாள் இரணமுடன் வீக்கம் தோன்றும்.
2.புண் ஏற்பட்டாற்போல் சிவப்பேறிக்காணும்.
3.அதிக வேதனை காண்பதுடன் சீதம் மிக எழும்.
4.விம்மும் தன்மை உடைய நரம்புகள் அடங்கி போகும்.
5.அண்டமும் (விதை கொட்டை )மிக வீங்கும்.

5) இரத்த ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.ஆண்குறி சிவந்து காணும்.
2.எந்நேரமும் வேதனை தோன்றும்.
3.உடலில் அதிக சுரம் காயும்.
4.தேன் போல் கழிச்சல் மிகுந்து வெளியாகும்.
5.எப்போதும் உடலில் எரிச்சல் இருந்து வரும்.
6.நினைவு தடுமாறி வேதனை அடைவர்.

6) அரிசிக்கல் ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.ஆண்குறியில் பல நோய்களை கிளப்பும்.
2.ஆண்குறியிலும்,உடலிலும்,நமைச்சல் தோன்றும்.
3.மூல நோயை ஏற்படுத்தும்.
4.உடல் பொருமிக் காணப்படும்.
5.வியர்வையுடன் ரத்தம் பொங்கும்.
6.சுக்கிலம் கெட்டுவிடும்.

7) சிலேற்பனத்தில் இரத்த ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.கண்களில் பல நோய்களை உண்டாக்கும்.
2.ஆண்குறியில் கடுகு போல் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டு அதில் இரத்தமும்,வியர்வையும்,கலந்து காணப்படும்.
3.காந்தலும் தோன்றும்.
4.சில் விஷம் கொண்டதுபோல் உடல் அரிப்பு எழும்.

8) சல ரோக ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.ஆண்குறியில் நீளமகா தடிப்புடன் முளை போன்ற கொப்பளங்கள் அதிகம் உண்டாகும்.
2.அந்த கொப்பளங்களிலிருந்து, சீழும், இரத்தமும் கலந்து வெளியா கும்.
3.அரிப்புடன் எரிச்சலும் காணும்.
4.உடலில் சீதளம் மிகுந்து காணப்படும்.
5.ரோமத்தில் சிலிர்ப்பு எழும்.

9) பித்த இரத்த ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

ஆண்குறி வீங்கும், இலந்தை விதைபோல் தோற்றமளித்து வெடித் து, மாமிசத்தை பெருக்கி சில்விஷம் போல் நோயை அதிகப்படுத்து ம்.

10) மேக ஆண்குறி நோய் :

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.கப ரோகம்,இரத்த ரோகம்,போன்ற நோய்கள் எழும்,
2.குட்டமும்,மேகமும் எழும்.
3.ஆண்குறியில் புண்ணும்,தணப்புடன் சீழும் வடியும்.
4.பொருமலும் உண்டாகும்.

11) எரிவு ஆண்குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1.எரிவு ஆண்குறி நோய் ஏற்பட்டால் இரத்தம் கலந்த உஷ்ணம் சிறு நீரில் தோன்றும்.
2.ஆண்குறியில் புண் உண்டாகி எரிவு ஏற்படும்.
3.இன்னும் சிறுசிறு கட்டிகள் தோன்றும்.
4.மயக்கம்,
5.சோபதாபம்,
6.கோழையுடன் இருமல் போன்றவை காணும்.
இன் நோயுடையவர் பிழைப்பது கடினம்.

12) பிடக ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1. பிடக ஆண்குறி நோய் ஏற்பட்டால் உழுந்து போலவும், பயறு போலவும்,அதிகமாக கொப்பளங்கள் ஏற்படும்.
2. மேலும் ஆண்குறியை சுற்றி நமைச்சல் ஏற்படும்.சன்னியும் வியர் வையும் ஏற்படும்.

13) தாமரைக் காய் ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1. தாமரைக் காய் ஆண்குறி நோய் ஏற்பட்டால் ஆண்குறி தமரை காய் போல் தடித்து அதில் கொப்பளங்கள் தோன்றி வெடித்து சீழும் இரத்தமும் கலந்து கசியும்.
2. சில்விஷத்தால் விளைந்ததுபோல் தோற்றமுரும். கொடுமையா ன பல நோய்கள் இதனால் உண்டாகும்.
14) விரலாண் குறி நோய்.

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

விரலாண் குறி நோய் தோன்றினால்

1. ஆண்குறியில் விரலைப் போலவும்,
2. புல்லாங்குழலைப் போலவும் தடித்து வீங்கிக் காணும்.
3. மேலும் உடல் வேதனையுரும்.அழல்(சூடு)மீறி (அதிகரித்து) வெள்ளை காணும்.
4. உடலும் இரணம் போலாகும்.

15) அழிவு ஆண் குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1. ஆண்குறியானது ரணமுடன் கதளி வாழைப் பழம் போல் காணும்.
2. இரணத்திலிருந்து சீழ் பாயும்.
3. எரிச்சலும் உண்டாகும்.
4. உடல் வேதனை யுறும்.
5. சில்விஷம் ஏறினால் போல் தோன்றும்.
6. கட்டிகள் பளபளப்புடன் அதிகம் எழும்.

16) கல்லாண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1. ஆண்குறியில் குழி ஏற்பட்டு அதிலிருந்து இரத்தமும்,சீழும் வெளி வரும்.
2. மலை போல் சிறு வெளியாகும்.
3. கல்போல் வீக்கம் ஏற்படும்.

17) பிளவை ஆண்குறி நோய்

இந்நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் :

1. பித்தமுடன் வாதமும்கூடி (தொந்தித்து) ஏற்படும் .
சிலேற்பனத்தா ல் ஆண்குறியில் பிளவை தோன்றும்.
2. இந்த நோய் ஏற்பட உடல் தடிக்கும்.சீதளமும் அதிகரிக்கும்.
3. பிளவை ஆண்குறி நோய் கொண்டவர் பகல் தூக்கம் அதிகம் விரும்புவர்.
4. இக்குணங்கள் காணப்படின் பிளவை ஆண்குறி நோய் என்று அறியவும்.

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.