ஆணிக்காலை குணப்படுத்த கடுகு போதுமே..!

0 453

ஆணி குத்தினால் வலி எப்படி ஏற்படுமோ அதேபோன்று கால் ஆணி ஏற்பட்டாலும் வலி உயிரைப் பிதுக்கி எடுத்துவிடும். மருத்துவமனைக்குச் சென்றால் சில சமயம் அறுவை சிகிச்சை அளவுக்குக் கொண்டுபுாய் விட்டுவிடுகிறது. அதை சரி செய்ய வலிதான் என்ன?

ஏதேனும் ஒரு பொருள் காலில் குத்தி கொண்டபோது அதை நீக்காமல் விடும்போது, தோல் படலம் வளர்ந்து கெட்டியாகி விடும். இதை தவிர்க்க மென்மையான காலணிகள் அணிய வேண்டும். காலணி இல்லாமல் வெளியில் செல்ல கூடாது. காலில் ஏதேனும் குத்தினால் உடனே அதை நீக்கி விட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் கடுகைக் கொண்டு, காலில் உண்டாகும் ஆணியை சரிசெய்ய முடியும். விளக்கெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றி, வறுத்த கடுகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தைலம்
போன்ற பதத்துக்கு நன்கு காய்ச்ச வேண்டும்.

நன்கு காய்ந்ததும் ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் தூங்கப் போகும்முன்பு கால்களைச் சுத்தப்படுத்தி, இந்த தைலத்தைத் தடவினால் கால் ஆணி குணமடைந்து விடும்.

அதேபோல் வறுத்த கடுகு, வேப்பிலை, மஞ்சள் தூள், குப்பை மேனி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கால் அணி மற்றும் உட்புறத் தோல் பகுதி தடித்திருந்தால் அந்த இடங்களில் இந்த கலவையைத் தடவி காட்டன்
துணி கொண்டு இரவு முழுக்க கட்டி வைத்திருக்க வேண்டும். அப்படி வாரத்துக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உள்ளங்காலில் இருக்கும் ஆணி மிக விரைவாக குணமடையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.