ஆங்கிலம் கூடுதல் மொழியா இருக்கணுமே தவிர குடும்ப மொழியா ஆகக் கூடாதுங்க!

0 372

அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;

” உயிரெழுத்துனா என்னமா ? ” என்றவனிடம் ” ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி உயிரெழுத்துனா தமிழ் VOWELS ” என்றபோதிருந்த பெருமை ;

அடுத்த வீட்டுப் பையன் ” அம்மா இங்கே வாவா , ஆசை முத்தம் தா தா ” என்றும் பாடும் பொழுது , தன்வீட்டுப் பையன் ” RAIN RAIN GO AWAY ” என்றுபாடிய
போது வந்த சந்தோசம் ;

எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட WORDSWORTH யும் SHAKESPHERE யும் சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ? இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும் மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;

பையன் என்ன டிவி பாக்குறான் என்று வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம் ” HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES ” என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;

இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம் ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!

HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம் செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்..

இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு.. ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன் !! ஆங்கிலம் கூடுதல் மொழியா இருக்கணுமே தவிர குடும்ப மொழியா ஆகக் கூடாதுங்க !!!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.