அழிந்து வரும் தமிழக நாட்டு நாய்கள்”:என்னென்ன வகைகள் தெரியுமா?

0 412
வெளிநாட்டு நாய்களின் மீது மோகம் கொண்டு அதனை வளர்க்கும் நீங்களும் ஒரு காரணமே நாட்டு நாய்களின் அழிவிற்கு

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழக காளைகள் அழிந்து வருவதாக,தமிழக இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக காளைகளைப் போலவே,தமிழகத்தின் நாட்டு நாய்களும் அழிந்து வருகின்றன.அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்..!

Samayam Tamil

கன்னி:

சுயமாக சிந்திக்கக் கூடிய நாட்டு நாயினம் என்பது கன்னியின் சிறப்பு.மிக எளிதாக மனிதர்களுடன் நட்பு பாராட்டும்.முற்காலத்தில் புகுந்த வீடு செல்லும் மணப்பெண்களுக்கு சீதனமாக கன்னி இன நாய்கள் வழங்கப்படும்.

Samayam Tamil

சிப்பிப்பாறை:

முயலை விட வேகமாக ஓடக்கூடியது.மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகம் வரை ஓடும்.மற்ற நாட்டு நாய்களை விட,மனிதர்களுடன் நெருங்கிப் பழகும்.வேட்டையில் சிறப்பாக செயல்படும்.

கோம்பை:

பண்ணைகளை காவல் காப்பதில் கோம்பையை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது.சற்று ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும்.ஒரு எருமையை தனியாளாக வேட்டையாடும் திறமையுடையது.

Samayam Tamil

ராஜபாளையம்:

இந்த இன நாய்கள் உயரத்திற்கு பேர் போனது.சுமார் 75 செ.மீ உயரம் வரை வளரும்.உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானது.ஒரு காலத்தில் செல்வ செழிப்பு மிக்க நபர்கள் மட்டுமே இந்த வகை நாய்களை வளர்த்து வந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.