அலங்காநல்லூர் கிராம மக்களுக்கும் , கமிட்டிக்கும் கடைக்கோடி காளை உரிமையாளர் எழுதிய கடிதம்..!

0 581

விழா கமிட்டியில் வந்தேறிகளின் ஆதிக்கம் இருந்தால் இப்படி தான் நடக்கும்.

நாங்கள் பேசும் அரசியலை என்று உணர்வாய் தமிழா?

இது என்ன அநியாயம்:

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு நிர்வாகமே இந்த பதிவு உனக்கு தான்!

ஒரு வருடம் காத்திருந்து தெய்வமாய் வணங்கி சுத்தபத்தமாய் விரதம் இருந்து உங்கள் ஊர் தேடி வந்தவருக்கு நீங்கள் செய்த மரியாதை மிக சிறப்பு.

இரவு பத்து மணிக்கு வரிசையில் போட்டு பள்ளிக்கூடத்தில் அடைத்தீர்கள்.

உணவு உறகமின்றி மனிதனும் மாடுகளும் ஒன்றோடு ஒன்று உரசியபடியே .

அவிழ்க்க முடிந்தது 600 மாடுகள் ஆனால் டோக்கன் கொடுத்தது 2000 மேல்.

தெய்வமாய் வணங்க வேண்டிய மாட்டின் காலடியில் நின்றபடியே சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.

உள்ளே வந்தவன் வெளியே செல்ல முடியவில்லை வெளியே உள்ளவன் உள்ளே வரமுடியவில்லை.

போலிஸ் அடி முது பழுக்க வாங்கிய வலி இன்னும் போகவில்லை.

5000 விலைக்கு விற்கபட்டது டோக்கன்.

டோக்கன் என்பது வெறும் கண்துடைப்புக்கே 14 நம்பர் டோக்கனில் இருந்தவர் மாடு அவிழ்க்க முடியாத அவல நிலை.

பணமும் பதவியும் படைத்தவருக்கே உங்கள் ஜல்லிக்கட்டு விழா என்பது அப்பட்டமான உண்மை.

போராடும் பொழுது அனைவரும் தேவை ஜல்லிக்கட்டு நடந்தவுடன் ஏழை பணக்காரன் ஆளுங்கட்சி எதிர்கட்சி ஊள்ளூர் வெளியூர் வேண்டியவன் வேண்டாதவன் என பாகுபாடு பார்பது நியாயமா???????????

உங்கள் பரிசு பொருளுக்கா நாங்க காத்து கிடந்தோம் வெறும் பெயருக்காக தானையா வந்தோம்.

பட்டினி பசி குடிக்க தண்ணீர் இல்லை நாங்க பொருத்து கொள்வோம் மாடு என்னயா பாவம் செய்தது.

தலையில் செம்மண் கோலமாய் அழுக்கு சட்டையுடன் கவலை தேய்ந்த முகத்துடன் காத்து கிடந்து மரியாதை இன்றி அவமானபட்டு திரும்பி போன முகங்கள் உங்கள் கண்ணில் படவில்லையி?

மிடியாக்களும் முன்னாடி நடப்பதை மட்டுமே காட்டுகிறது புற வாடியில் நடப்பது தெறிவதில்லை.

கணக்கில் அடங்கா இன்னல்கள் கண்டும் பலன் இல்லை .

உங்களுக்கும் ஒரு மனசாட்சி உண்டு அதனிடம் கேளுங்கள் நீங்க நடத்தியது நேர்மையான முறையில் தானா என்று????

தனக்கு குடிக்க கஞ்சி இல்லை என்றாலும் பெற்ற பிள்ளைய பட்டிணிபோட்டு பருத்திவிதை வாங்கி வைத்த அப்பாவி தானையா நேற்று அசிங்கபட்டு போனது.

உலகப்புகழ் அலங்காநல்லூர் என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தான்.

வீரனுக்கு ஆயிரம் மேடை சோர்வடைய மாட்டோம் உங்க ஊரை மட்டும் நம்பி யாரும் இங்க மாடு வளர்க்வில்லை.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது ஒரு வியாபார தளம் இங்கு பணம் பதவி இருப்பவருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கபடும் என்பது உலகப்புகழ் பெற்றுவிட்டது.

வலியும் வேதனையும் பட்டவனுக்கு மட்டுமே தெறியும் இன்னும் சொல்ல நிறைய இருக்கு மறைக்கிறேன் மதுரையின் மானம் கருதி.

சொல்லிகாட்ட விரும்பவில்லை போரட்ட களத்தில் பட்டினியும் பசியுமாய் உடன் பிறப்புகள் இருக்குமென்று ஊரோடு சோறு பொங்கி வண்டி வண்டியாய் வந்திரங்கினோம் .

அதற்கு பதிலாய் நீங்கள் தந்த வெகுமதி அவமானம். நன்றிகள் கோடி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிர்வாக குழுவினர்க்கு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.