அரசு வேலை வேண்டுமா..? அமைச்சரிடம் பணம் கொடுத்தால் போதும்..!

0 203

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்து 5 மாதங்களாகி விட்டது. ஆனால் தற்போது வரை தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இதனால் தேர்வு எழுதியோர் தேவையற்ற கவலை மற்றும் பீதியில் உள்ளனர்.  எனவே தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் செய்யாமல் வெளியிட வேண்டும்

நியமன ஆணைகள் வழங்கும் விவகாரத்தில் வேளாண்துறை அமைச்சரும், அவரது உறவினர்களும் தலையிட்டு வருவதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் 416 பேர் மட்டுமே பங்கேற்ற நேர்காணலின் முடிவுகளை வேளாண் பல்கலைக்கழகம் 150 நாட்களாகியும் வெளியிடாதது சந்தேகத்தை வலுப்பெற செய்துள்ளது. உதவி வேளாண்மை அலுவலர் பணிக்கான  முடிவுகளை வெளியிட்டு, நியமன ஆணைகளை வழங்குவதன் மூலமாக மட்டுமே இதை போக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். வேளாண் பல்கலைக்கழகம் முடிவுகளை அறிவித்தால் அதில் வெற்றி பெற்றவர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்காணலில் பங்கேற்கத் தேவையில்லை.

ஆனால் முடிவுகள் தாமதமானால் இரு தேர்வுகளிலும் பலர் வெற்றி பெறும் பட்சத்தில், அவர்கள் விட்டுக் கொடுக்கும் பணி தகுதியற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் வாய்ப்பு உள்ளது. இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.