அமெரிக்க ரஷ்ய பனிப்போர் களமா சிரியா…?

0 169

சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க பழமையான நாடு “சிரியா ” தலைநகர் டமாஸ்கஸ், மொத்த மக்கள் தொகை 2 1/2 கோடி ஆகும். 1944 ம் ஆண்டு பிரான்சிடமிருந்து விடுதலைப்பெற்றது சிரியா.

60 சதவீதம் பேர் சன்னிப்பிரிவு முஸ்லீம்களும்,
25 சதவீதம் பேர் ஷியாப்பிரிவு முஸ்லீம்களும்,
15 சதவீதம் பேர் கிறிஸ்த்தவர்களும் வசிக்கின்றனர்.

1970 ஆம் ஆண்டிலிருந்து ஹப்பெஸ் அல் ஆசாத் ஆண்டு வருகிறார்.
ஆண்டது போதும் என்று கருதி 2011 ஆண்டு வாக்கில் ஆட்சி அதிகாரத்தை அவருடைய இளைய மகன் பஷர் அல் அஸாத்திடம் ஒப்படைத்தார் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுத்தாலும் இது பெரும் மோசடி என்று போர்கொடி தூக்கினர் எதிர் கட்சிகள்.

பிரச்சனைக்கு மூலக்காரணம் :

60 சதவீதம் பேர் இந்நாட்டில் சன்னிப்பிரிவு மக்கள் வாழும் போது குறைவான எண்ணிக்கை கொண்ட ஷியா பிரிவினர் நம்மை ஆள்வதா என்ற முழக்கம் மேலோங்கியது.

சிரியா நாடு இரண்டாக பிளப்பு :

2014 க்கு பிறகு இரு அணிகளின் கீழ் நாடு பிரிந்தது.

ஷியா பிரிவு போராளிகளுக்கு தன் இனம் என்ற அடிப்படையில் கத்தாரும், சவுதி அரேபியாவும், வல்லாதிக்கம் செலுத்த அமெரிக்காவும், இஸ்ரேலும், துருக்கியும் ஆதரவு தெரிவித்தும் ஆயுதமும் வழங்கி வருகின்றன.

அதிபர் ஆதரவுப் படைக்கு இன அடிப்படையில் ஈரானும், வல்லாதிக்க நோக்கோடு ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்தும், ஆயுதம் வழங்கியும் வருகின்றன.

போரின் தாக்கம் :

5 ஆண்டுப் போரில் சிரியா இரண்டாம் உலகப்போரில் உருக்குலைந்த ஹிரோசிமா, நாகசாகி போல் ஆகிவிட்டது ஒட்டுமொத்த தேசமும்.

அதிகாரப்போட்டியில் இரண்டு தரப்பிலும் 11/2 லட்சம் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
பொது மக்கள் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். 5000 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர்.
1கோடி பேர் போர் நடைப்பெறாத இடங்களுக்கும், அண்டை நாட்டிற்கும் புலம்பெயர்ந்தனர்.

தீர்வு தான் என்ன :

நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்கொள்ள சிரியாவை அமெரிக்காவும் ரஷ்யாவும் போர்களமாக மாற்றியுள்ளனர்.

தீர்வுக்கான வழி முற்றிலும் இல்லை ஏனெனில் அரபு தேசம் முழுவதும் பரவி வாழுகின்ற ஷியா, சன்னிப்பிரிவு இஸ்லாமிய நாடுகள் இம்முறை ஒரு கை பார்த்து விடுவது என்ற முனைப்பில் உள்ளது.

ரஷ்யா தன்னுடைய படையை விளக்கி கொள்வதாக சொல்லி விட்டு அதி நவீன U -400 ரக ஏவுகணைகளை சிரியாவிற்கு மறைமுகமாக வழங்கியுள்ளது.

அதற்கு இணையாக அமெரிக்காவும் தனது கடற்படையை மத்தியத் தரைக்கடல் பகுதியில் நிறுத்திகொண்டு அங்கிருந்து “தொமஹாக்” ரக ஏவுகணைகளை அரசப்படைக்கு எதிராக ஏவி வருகிறது.

பெரும் அழிவிற்கு பிறகு தான் போர் முடிவுரும் என்பதை அரிய முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.