அந்த இரவுகள் மிகவும் கொடூரமானது…! கற்பழிப்பு , உயிரிழப்பு, அரக்கனின் பிடியில்..!

0 2,149

எங்கும் மரண ஓலம், மாலை இறந்த தகப்பனை புதைத்த இடம்தெரியாது, ஓடிய பாதையில் செல்லடிபட்டு சிதறிப்போன தாயின் உடல்போன திசை தெரியவில்லை, நடு இரவில் சிங்கள காடையார்களால் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்ட அக்காவின் அழுகுரல் இன்னும் காதைவிட்டு நீங்கவில்லை. அதிகாலைவரை நான் உயிரோடு இருப்பேனா என்பதற்கு உத்திரவாதம் ஏதுமில்லை. இப்படித்தான் அன்றைய ஈழ மனித வாழ்வு

கால்வாய் போல தோண்டப்பட்ட அந்த குழுயினுள், விறகுகட்டைப்போல் டிராக்கடரில் ஏற்றப்பட்ட உடல்கள் மொத்தமாக கொட்டப்பட்டு புதைக்கப்பட்டது. இப்படியாக நிகழ்ந்தது ஒன்றல்ல, இரண்டல்ல, இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட 176000 உறவுகளின் அலறல்கள் அந்த இரவையே நிறைத்து நின்றது.

இரவு முடிந்த நொடிகளில் வன்னிக்கட்டு மரங்களின் கிளைகள், பச்சிளம் பிள்ளைகளின் சதைகளை தோரணமாக உடுத்தி இருந்தது. பதுங்குகுழிகள் அனைத்தும் பாடைக்குழிகளாக மாற்றப்பட்டு புதைபட்டு இருந்தது. கொடுந்தீயால் வெந்து முடித்த அடர்காடு போன்று எல்லாம் எரியூட்டப்பட்ட பாதி வெந்தும் வேகாததுமாய் மரங்களும், மனிதர்களுமாய் கிடந்தார்கள்.

அந்த இரவு வழக்கமான இரவு போல் இல்லை. மனிதப்பேரவலாம் நிகழ்ந்து முடிந்த இருந்தது. ஒரு வெறிநாயின் கோரப்பற்களில் அகப்பட்ட சிறு குழந்தையைப்போல, அந்த இரவு முழுதும் சிங்கள மிருகங்களால் வேட்டையாடப்பட்டு கிடந்தது தமிழர் நிலம்.

எல்லா உயிர்க்கும் மதிப்பு ஒன்றுதான். ஆண்டுகள் 9 ஓடி முடிந்திருந்தாலும் எங்கள் கண்கள் இன்னும் அந்த உறவுகளையும், அந்த இரவுகளையும் மறக்கவில்லை

இன்றைய உங்களின் இந்த இரவை விட, அன்றைய எங்களின் இரவு கொடூரமானது. நாங்கள் அந்த இரவை கடக்க விதிக்கப்பட்டது அனைத்தும் மனிதகுலத்தின் அநீதியானது.

ஆனால் இன்றைய உங்களின் இரவு இயற்கையின் நீதியானது.காலச்சக்கரம் மேலச்சுழலும்.

ஒவ்வொரு இரவிலும் அவர்களின் இரவை கடக்க முடியாது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.