அந்த இரவுகள் மிகவும் கொடுரமானது…! வெளியே புன்னகை உள்ளே வலிகள்..!

0 792

ஒலைக்குடிசை அடைமழை பெய்தால் ஒழுக ஆரம்பித்தது விடும்..! அன்றைய தீபாவளிகளில் மழைக்கு ஒரு இடமுண்டு தீபாவளி என்றாலே அடைமழை என்று…!

அன்றைய நாட்களில் ஓலைகுடிசை தகப்பன்கள் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல்தான் வீடு வருவார்கள் காரணம் குழந்தைகள் தூங்கியிருப்பார்கள் என்று..!

தாயானவள் தந்தை புத்தாடையும் ,பட்டாசும் இரவு வாங்கிவருவதாக தூங்க வைத்திருப்பாள் குழந்தைகளை..!

அந்த இரவில் பெய்யும் மழையில் குழந்தை எழுந்தாலும் எழுந்துவிடும் என்று ஓலைக் குடிசையில் ஒழுகின்ற இடமெல்லாம் பாத்திரத்தை வைத்துவிடுவாள்…!

வழக்கமான இரவுகளை விட அந்த இரவுகள் இருக்காது..! விரைவில் விடிந்துவிடும் தூக்கமில்லாமல் தூங்கி எழுந்த குழந்தைகள் தந்தையை தேடுமுன்னே புத்தாடையையும்,பட்டாசுகளையும் தேட ஆரம்பிக்கும்..! அப்போது தயக்கத்தோடே அடுப்பனையில் இருந்தாரு தந்தை இன்று மதியம் வாங்கி வந்துவிடுவார் என்று கூறிவிடுவாள் தாய்அவள்.!

அதுவரைக்கும் மனதிற்குள் அழுத அந்த குழந்தைகள் வெளிப்படையாக அழத்தொடங்கும் எதிர் வீட்டுகார்கள் ஏளனம் பேசிவிடுவார்களோ என்று சமானத்தன படுத்த முயலும் தாய் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவுவாள்..!

தந்தையின் உழைப்பை சுரண்டிய முதலாளி அவனே இன்று நாளை என்று ஊதியத்தை தராமல் இழுத்தடிப்பான்..!அவனை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் இந்த தகப்பனால்..!

கடனாவது வாங்கி குழந்தைக்கு புத்தாடையும், பட்டாசும் வாங்கலாம் என்று எண்ணி கடன் கேட்க சென்றால் அங்கு இதை விட ஏமாற்றங்களே மிஞ்சும்..!

இத்தனையும் நடந்த முடியும் போது தீபாவளியும் முடிந்துவிடும் அடுத்த தீபாவளிக்கு புத்தாடையும் பட்டாசும் வாங்கி தருவதாக மீண்டும் ஊதியம் தர மறுத்த முதலாளியிடமே உழைக்க செல்வார் தகப்பன்..!

ஏமாற்றத்தை மட்டுமே பழகிய அந்த குழந்தைகள் எதிர்பார்ப்புகளை குறைத்துவிடும்…!

பலருக்கும் விழாக்கள் சந்தோசமா அமைகிறது..!

சிலருக்கு இதுபோன்ற ஏமாற்றங்களே மிஞ்சுகிறது..!

ஒவ்வொரு முறையும் ஓலைக் குடிசையை கடக்கும் போது என்னை அறியாமலே என் கடந்த கால நினைவு கண்ணருகே வந்து விடுகிறது..!

இன்று என் நிலை எப்படியோ மாறிவிட்டது ஆனால் நினைவுகள் தொடர்கிறது…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.