அது என்ன நோய் சார்..? ரோட்ல பஸ் வரலன்னா போராடுறது வாய்கால்ல தண்ணி வரலனா மொளனம் காப்பது..?

0 286

சாணரப்பட்டி மூலக்காடு நீரேற்றுத்திட்டம்

மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீரை நீரேற்றுத்திட்டத்தின் மூலம் வனவாசி மூலக்காடு பகுதிக்கு மின்மோட்டார்
மூலம் நீரை பம்ப் செய்தால் இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பாதை வழியாக சாணரப்பட்டி, சூரப்பள்ளி,
காட்டம்பட்டி, சின்னப்பம்பட்டி வழியாக சரபங்கா நதிக்கு நீரை கொண்டு இல்ல முடியும். அதன் வழியில்
உள்ள பல்வேறு ஏரி, குளம் நிரம்பி அந்த பகுதியில் நீர்மட்டம் உயரும்.

இவ்வழியில் சிற்றோடைகள்
வழியாக இயற்கையாகவே வனவாசி, எடையப்பட்டி போன்ற சிறிய கிராமங்களுக்கு நீர் சென்று பாசன வசதி
பெற வாய்ப்புண்டு. ஏற்கனவே இத்திட்டம் தமிழக நீர் ஆதாரத்துறை தலைமைப் பொறியாளரிடம் நிலுவையில்
உள்ளது..

பொதுபணித்துறை செவி சாய்க்குமா..? உபநீரை மற்ற மாநிலங்கள் கையாளுவதை போன்று தமிழகம் கையாளாமல் 8வழிச்சாலையில் முனைப்பை காட்டுவது வேடிக்கை தான்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.