அதிர வைக்கும் பால் கலப்படம்: கலப்படத்தை தவிர்க்க நாம் செய்யவேண்டியது..?

0 301

அதிர வைக்கும் பால் கலப்படம்: சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, வெள்ளை நிற பெயிண்ட்; 68% தரமற்றது

இந்தியாவில் உற்பத்தியாகும் பால் மற்றும் பால் பொருட்களில் 68 சதவீதம் அதிக கலப்படத்துடன், தரமற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, விலங்குகள் நல வாரிய உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா கூறியுள்ளதாவது:

இந்தியாவில் தனியார் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பாலிலும் அதிகஅளவு கலப்படம் செய்யப்படுகிறது. இந்திய தரச்சான்று நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி பால் விற்பனை செய்யப்படுவதில்லை.

பால் கெட்டியாகவும், நீண்டநாள் பயன்படுத்தும் வகையிலும் இருப்பதற்காக பல்வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. . பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்றவை பாலில் கலக்கப்படுகின்றன. இவை மிகவும் ஆபத்தான கலப்பட பொருட்கள்.

மேலும், குளுகோஸ், ரீபைண்ட் ஆயில், ஸ்டார்ச், யூரியா, பார்மலின் போன்றவற்றை கலக்கின்றனர். இவை உடலுக்கு பெரிய அளவில் தீ்ங்கு ஏற்படுத்தும். இந்தியாவில் நாள்தோறும் 14.68 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. இந்த கலப்படத்தால் உடல் உறுப்புகள் பாதிப்படையும்.

இந்தியாவில் பால் பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை தடுக்காவிட்டால், 2025-ம் ஆண்டில் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பை 87 சதவீத மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எனவே பால் பொருட்கள் கலப்பட விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறினார்.

இந்த நிலை மாற்றம் வரவேண்டும் என்றால் ஒரே தீர்வு ஒவ்வொரு வீட்டில் மாடு அல்லது ஒவ்வொரு குடும்ப பின்னனியிலும் ஒரு மாடு வளர்த்தால் மட்டுமே நல்ல பால் அருந்த முடியும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பதிவு:தி இந்து நாளிதழ்

You might also like

Leave A Reply

Your email address will not be published.