அணு ஆயுதத்தில் மிரட்டும் உலக நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா..?

0 468

உலகை ராணுவ பலத்தால் மிரட்டும் ’டாப் 5’ நாடுகளிடம் என்ன இருக்கிறது?

இந்த உலகம் சுக்கு நூறாக உடைந்து போவதாக கனவில் நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால், அதுவே உண்மையானால்…? அணு ஆயுத சக்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களைக் கொண்டு, இந்த உலகை ஒரு முறை அழித்துவிடலாம்.

அமெரிக்காவிடமுள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு இந்த உலகத்தை 27 முறை லட்ச லட்சத் துண்டுகளாக வெடிக்கச் செய்து விளையாடலாம். உலக நாடுகளிலுள்ள மொத்த அணுஆயுதங்களையும் சரியாகப் பொருத்தி விசையைச் சொடுக்கினால், இந்தச் சூரிய மண்டலமே எப்படி இருந்தது என்ற வரலாறே தெரியாதவண்ணம் அழிந்து போய்விடும்.

இதுவரை வந்த ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமல்ல, நம் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத பல கொடிய ஆயுதங்களால், நிறைந்து கிடக்கிறது இப்பூமி. இப்படி போட்டிப் போட்டுக்கொண்டு உலகை அழிக்கும் ஆயுதங்களை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்?

பேராசை யாரை விட்டது?

‘உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்’ என்ற வல்லரசு நாடுகளின் வல்லாதிக்கக் குணம் வளர்ந்துவரும் நாடுகளையும் பீடித்திருக்கிறது. இதன் விளைவுதான், விவசாயத்தை விட, கல்வியை விட ராணுவத்துக்கும், அணு ஆயுதத்துக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன இந்நாடுகள். இதை மொத்தமாக தவறென்றும் சொல்லிவிட முடியாது.

பிறநாடுகளின் தாக்குதலிலிருந்து தன் நாட்டைப் பாதுகாக்க ஒவ்வரு நாடும் ராணுவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஒரு நாட்டின் ராணுவக் கட்டமைப்பே அந்த நாட்டை உலக நாடுகளின் மத்தியில் கம்பீரத்தோடு நடக்கச் செய்கிறது. அமைதியே சிறந்த ஆயுதம் என்ற போதிலும் தற்போதைய காலத்தில் அமைதியைப் போதனை செய்ய எந்த நாடும் தயாராக இல்லை.

காரணம் ‘உலகத்திலேயே நம் நாடு மட்டுமே பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் எல்லா நாடுகளிடையேயும் படிந்துகிடக்கிறது. அதனால்தான் கல்வி, மருத்துவம், விவசாயம், இவற்றுக்கு ஒதுக்கும் நிதியை விட ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியின் அளவு அதிகமாக இருக்கிறது. இதற்கு எந்தவொரு நாடும் விதிவிலக்கல்ல. ஆக, ‘வல்லரசு நாடு என்பது ராணுவ வலிமையைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டுவருகிறது’.

இப்போதிருக்கும் வல்லரசு நாடுகள், ‘இனி எந்த நாடுகளும் அணு ஆயுதங்கள் தயாரிக்கக்கூடாது’ என்பதில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன. காரணம் அவன் பலசாலியாகிவிட்டால் நாளை நம்மையே எதிர்க்கத் துணிவான் என்ற காரணம்தான். இதற்குச் சமீபத்திய மிகச் சிறந்த எடுத்துக்காட்டு… அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணுஆயுதப் போட்டிதான்!

‘உலகையே நடுங்க வைக்கும் சக்தி பொருந்திய ஆயுதங்களை வைத்துக்கொண்டு முன்னணியில் இருக்கும் நாடுகள் எவை?’ என்ற கருத்துக்கணிப்பை ஒவ்வொரு வருடமும் ‘க்ளோபல் ஃபயர் பவர்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. அதனடிப்படையில், இந்த வருடமும் எந்த நாடு ராணுவ பலத்தில் சிறந்து விளங்குகிறது என்ற கருத்துக்கணிப்பை க்ளோபல் ஃபயர் பவர் மற்றும் கிரெடிட் சூசே என்ற இரு நிறுவனங்களும் இணைந்து எடுத்துள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பு என்பது, துப்பாக்கிகள், டாங்குகள், போர்ப்படை விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள், மொத்த ராணுவ வீரர்கள், ராணுவத்துக்குச் செலவிடப்படும் தொகை ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. 127 நாடுகளை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தக் கருத்துகணிப்பில் முதலில் இருக்கும் ஐந்து நாடுகள் பற்றிய விபரங்கள் இவை :

1. அமெரிக்கா :

ராணுவ பலத்தில் கடந்த காலத்திலிருந்தே முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா மட்டுமே. ஒவ்வொரு வருடமும் சுமார் 600 பில்லியன் டாலர்களை ராணுவத்துக்காக ஒதுக்கிவருகிறது. அமெரிக்க ராணுவத்தில் மொத்தம் 14,77,896 படை வீரர்கள் இருக்கிறார்கள். உலக நாடுகளை அணு ஆயுதங்கள் தயாரிக்கக்கூடாது என்று எச்சரித்துவருகிறது அமெரிக்கா. ஆனால், அதே அமெரிக்கா வைத்திருக்கும் அணுஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை 7,000-க்கும் மேல். 15,293 போர் விமானங்கள், 8,848 பீரங்கிகள், 290 போர்க் கப்பல்கள், 72 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 10 விமானம் தாங்கிய போர்க் கப்பல்களும் அமெரிக்காவின் கைவசம் உள்ளது.

2. ரஷ்யா :

8,500 அணுஆயுதங்களை வைத்திருக்கும் ரஷ்யா வலிமையான ராணுவக் கட்டமைப்பில் இருக்கும் இரண்டாவது நாடு. ரஷ்ய ராணுவத்தில் மொத்தம் 7,66,055 படை வீரர்கள் இருக்கிறார்கள். 15,000 பீரங்கிகள், 4,498 போர் விமானங்கள், 352 போர்க் கப்பல்கள், 55 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் உள்ளது. ஒரு வருடத்துக்கு 84.5 பில்லியன் டாலர் தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கி வருகிறது ரஷ்யா.

3. சீனா :

உலகிலேயே அதிகளவு படைவீரர்களைக் கொண்ட நாடு சீனாதான். அதாவது மொத்தமாக சீன ராணுவத்தில் 23,35,000 படைவீரர்கள் இருக்கிறார்கள். ஆயுத பலத்திலும் மற்ற நாடுகளை பயம் கொள்ளவைத்து வருகிறது இந்நாடு. 9,150 பீரங்கிகள், 5,048 போர் விமானங்கள், 714 போர்க்கப்பல்கள், 67 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி கப்பலுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது சீனா. ராணுவத்துக்காக வருடந்தோறும் 216 பில்லியன் டாலர் செலவு செய்து வருகிறது சீனா

4.இந்தியா :

உலகளவில், ராணுவ வலிமையில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா. வருடந்தோறும் இந்திய அரசு ராணுவத்துக்காக சுமார் 50 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி வருகிறது. இந்தியாவிடம் தற்போது 6,464 பீரங்கிகள், 2,086 போர் விமானங்கள், 295 போர்க்கப்பல்கள், 15 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 2 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் 13,25,000 படைவீரர்களோடு உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது இந்தியா.

5.ஃபிரான்ஸ் :

ஒவ்வொரு வருடமும் சுமார் 62.5 பில்லியன் டாலர் தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கி வருகிறது ஃபிரான்ஸ். 2,05,000 படை வீரர்களோடு, 423 பீரங்கிகள், 1,282 போர் விமானங்கள், 118 போர்க்கப்பல்கள், 4 விமானம் தாங்கி கப்பல்கள், 10 நீர்மூழ்கி கப்பல்களோடு ராணுவ வலிமையில் ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது.

இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மன், ஜப்பான், துருக்கி போன்ற நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் தங்களின் ராணுவ பலத்தை காட்டி வருகின்றன.

எங்களிடம் இவ்வளவு அணுஆயுதங்கள் இருக்கிறது என்று எந்த நாடும் வெளிப்படையாகச் சொல்லியதில்லை. ஆனால், ஒவ்வொரு நாடும் மறைமுகமாக தங்களது அணு ஆயுதங்களை வெளியுலகுக்குத் தெரியாமல் பாதுகாத்து வருகின்றன. இப்போது நினைத்துப் பாருங்கள்… அனைத்து நாடுகளின் அணு ஆயுதங்களையும் ஒன்றாக இணைத்து வெடிக்கச் செய்தால்.

கடந்த 1968-ஆம் ஆண்டில் அணு ஆயுதம் வைத்திருந்த அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே அணு ஆயுத நாடுகளாக அந்த ஒப்பந்தத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 1998-ஆம் ஆண்டு அணு குண்டுப் பரிசோதனை நடத்திய இந்தியாவையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்திய தரப்பில் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.