அடுத்த ஜென்மத்துல குரங்கா நானும் பிறக்குறேன் வலியின் உச்சம் உணருங்கள்..!

0 211

தோள்ல தூக்கி வளர்த்த பிள்ளைங்கலாம்
என்னை தொல்லைனு சொல்லி ஒதுக்கிருச்சு

காசு பணம் இருக்கும்போது காலைப்பிடிக்ககூட ஆள் உண்டு
காசெல்லாம் கரைஞ்சிருச்சு
அதான்
மரியாதை குறைஞ்சிருச்சு

நான் ஊட்டி ஊட்டி வளத்ததுங்க எல்லாம்
ஊட்டியில பொழைச்சிருக்க
நாலு வாய் சோத்துக்கே
நான் நாதியத்து அலையிறேனே

நிற்க நிழலில்ல
படுக்க பாயில்ல
மனுசனே இங்க இல்ல

குரங்கு மாதிரி அலையுறேன்னு
என் ஆறுதலா
குரங்குராசா நீ வந்துட்டியா

பாதி பழம் நீ திங்க நான் கொடுத்தேன்
அந்த நேசத்துக்கா
என்னை பாசமாக பார்த்துக்கிற

மனுசன்தான் உயர்ந்தவன்னு சொல்லி வச்சது யாரு
இரக்கத்துல கண்கலங்கும் இந்த குரங்க கொஞ்சம் பாரு

எனக்கு என்ன வேணும்னு கேட்குறியே குரங்குராசா
உனக்கு பிரதிபலனா தர்றதுக்கு என்கிட்டயும் ஒன்னு இருக்கு கேளு ராசா

அடுத்த ஜென்மத்துல
குரங்கா நானும் பிறக்குறேன்
பத்து குரங்கையாவது பால் குடுத்து நான் வளர்க்குறேன்…!

ஆக்கம்: வே.ரா.சேகரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.