அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா வாழ்ந்தோம், பட்டணத்துக்கு வா பலீஷா வாழலாம் ன்னு

2 1,248

அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.
அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.

சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.

போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.
இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.

உப்பையும் சாம்பலையும் வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும்.அதனால பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. அதையும் நம்பி யூஸ் பன்னுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி.
கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கானு கேக்குறான்.

பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட் விக்கிறதும் நீங்கதான?
அதைவிட கொடுமை ஒண்ணு இருக்கு.

நாட்டு சக்கரையை விட சீனி தான் சுத்தமானது சுவையானதுனு சொல்லிட்டு இப்ப அதுல ஊர்ல இருக்குற எல்லா கெமிக்கலும் இருக்கு.

என்னடா இது அக்கப்போருன்னு வெறும் பச்ச தண்ணி குடிக்கலாம்னா ஆபத்து R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு சொன்னாங்க.ஒரு மெசினை வாங்கி மாட்டினோம்உடனே அதல சத்து இல்ல ,எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது.
மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப்.

மாடில தோட்டம் போடுஉனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு,நாட்டு கோழிவளர்த்தா முட்டையும்சிக்கனும் கிடைக்கும் தண்ணிய கொதிக்க வச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராதுன்னுச்சு

அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா வாழ்ந்தோம்,
பட்டணத்துக்கு வா பலிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வச்சுட்டு இப்ப திருப்பி அதையே சொல்றீங்களேடா?

பதிவு:

You might also like
2 Comments
  1. Indian says

    Your articles and messages are very very useful and have wide perspective about the social,cultural,political and health issues…,i like it and i find it useful …
    your life experience and your clarity in thoughts makes me to complement you.

    i would like to know about you ,atleast name or something..are you in cine field?? who are you .how to contact you ?

    1. பாரதி says

      தங்களை பற்றி..?

Leave A Reply

Your email address will not be published.