விவசாயிகளுக்கு ரூ 2000 கொடுக்கும் அரசு! வேளாண்மை கூட்டுறவு கடன் 2000 வாங்கி திருப்பமுடியாமல் நகையை ஏலத்திற்க்கு விடும் நிலையிலும் விவசாயிகளின் கடனை ரத்து செய்தால் ஏன்?

0 234

தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு ரூ 2000 கொடுக்க ஏற்ப்பாடு செய்த தமிழக அரசு, விவசாயிகள் வாங்கிய 2000, முதல் 5000 கடனை செலுத்த முடியாமல் அடகு வைத்த நகைகளை ஏலத்திற்க்கு விடும் சூழலில் கூட அரசு கருணை காட்டாமல் உள்ளது.

விவசாய கடன் என்றால் பல லட்சம் என்று நினைக்க வேண்டாம், வெறும் பத்தாயிரத்துக்குள் தான் இருக்கும், அதற்க்கு அவர்களிடம் நகைகள் அல்லது பட்டா சீட்டா போன்ற வற்றை வங்கியில் அடகு வைத்த பின்னை பணம் கொடுக்கப்படுகின்றது. மழை தண்ணீர் இல்லாமல் அந்த கடனை கூட செலுத்த வழி இல்லாமல் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் கடனை ரத்து செய்தால் என்ன?

நேற்றய பத்திரிக்கையில் A2934 மதுரை திருவாதவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திடம் சில ஏழை விவசாயிகள் கடன் பெற்று கடமுடியாமல் இந்த நகைகள் ஏல அறிவிப்பு விட்டது. இதில் வெறும் 2000 – 4000 ரூ கட்ட முடியாமல் தவிர்க்கும் விவசாயிகளின் பெயரை பத்திரிக்கையில் போட்டு அவமான படுத்திய அரசு தான் தமிழம் முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு 2000 ரூ என 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

விவசாயிகளுக்கு ஒதுக்கவில்லை ஓட்டு வாங்கவே ஒதுக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.