விளையாட்டு பொருளாகிய குழந்தை விபரிதம்..! தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்..!

0 165

ஆற்று பாலத்தில் செல்ஃபி எடுக்கும்போது குழந்தையை தவறவிட்ட கரூர்வாசி

கர்நாடகாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் மேற்கு தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் ஆர்வமாக பார்க்கச் செல்கின்றனர்.

கரூரை சேர்ந்த பாபு என்ற நபர் மனைவி மற்றும் குழந்தையுடன் மோகனூர் அருகே காவிரி ஆற்று பாலத்திற்கு வந்துள்ளார். தனது 4 வயது மகனை ஒரு தூண் மேல் அமரவைத்தது செல்ஃபி எடுக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக காவிரி ஆற்றில் குழந்தை விழ, வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது.

பெற்றோர்கள் அலறினார்கள். எனினும், குழந்தையை மீட்க முடியவில்லை. இந்நிலையில் காவிரி ஆறு அருகே யாரும் விபரீதமாக செல்ஃபி எடுக்கக்கூடாது என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.