வாழ்க்கையில் செய்யக் கூடாதவை: கட்டுப்படுத்தத் தெரியாத காமம் கோபம்

0 3,421

பிறன் மனை சேர்தல் (அடுத்தவர் மனைவியோடு தகாத உறவு)

  • திருமணத்துக்கு முன் சேர்தல் (“இந்தக்காலத்தில் இதைச் சொன்னால், “அடப் போய்யா பழைய பஞ்சாங்கம்” என்பார்கள். ஆனால், கற்பைப் பேணுதல் தான் நமது இந்தியப் பண்பாடு).
  • கடன் வாங்கி ஆடம்பரச் செலவு செய்வது
  • தகுதிக்கும் வருமானத்துக்கும் மீறிய வாழ்க்கை, கடன் சுமையை ஏற்றிக்கொள்வது
  • திருப்பித் தரும் உத்தேசம் எதுவும் இல்லாமலே கடன் வாங்குவது
  • கடன் வாங்கிவிட்டு, திருப்பித் தராமல் கொடுத்தவரிடம் திமிராயும் அலட்சியமாயும் அவமரியாதையாயும் பேசுவது
  • நம்பிக்கைத் துரோகம்
  • திருட்டுத்தனம்
  • ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் புறம் கூறுவது, வம்படிப்பது
  • தன் சுய நல நோக்கத்துக்காக அடுத்தவரை மிகச் சாமர்த்தியமாக வேலை வாங்குவது
  • லஞ்சம் வாங்குவது
  • லஞ்சம் கொடுக்க சக்தியில்லாதவர்களின் பணியையும் வேண்டுமென்றே முடக்குவது
  • காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது; வாக்களிக்க காசு கேட்பது
  • இலவசங்களை அதிகம் அள்ளித்தரும் கட்சிக்கு, தேச நலன் பற்றிய யாதொரு அக்கறையும் இல்லாமல் ஓட்டுப்போடுவது
  • போதை மருந்துப் பழக்கம், புகைப்பழக்கம், குடி, விலைமகள் தொடர்பு, தீய நண்பர்கள் சகவாசம்
  • பொருளாதார வெற்றியை மட்டுமே வாழ்வின் வெற்றியின் அடையாளமாகக் கொள்வது
  • பச்சையான சுயநலத்திற்காக அநியாயத்துக்கும் அதர்மத்துக்கும் துணை போவது
  • இராப்பகல் பணம் சம்பாதிப்பதற்காகவே ஓடிக் குடும்பத்தைப் புறக்கணிப்பது
  • இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கப் பார்ப்பது
  • தான் இளமையில் அனுபவிக்க முடியாதவைகளையெல்லாம் தன் குழந்தைகள் அனுபவிக்கட்டும் என்று கேட்பவை எல்லாம் வாங்கிக்கொடுத்துச் செல்லம் கொடுத்துக் கெடுப்பது
  • வயதான காலத்தில் பெற்றோரைப் புறக்கணிப்பது
  • எதிர்காலத்துக்கென சேமிக்காமல் இருப்பது
  • திருமண உறவில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காது, அகங்காரம், திமிர், சுயநலம் இவற்றை முன்நிருத்தி அடக்கியாள்வது, அவமரியாதை செய்வது
  • ஒன்றின் மீது அளவுக்கு மீறி உணர்ச்சிபூர்வமான பற்றையும், பாசத்தையும் வெறியாய்ப் பிடித்துக்கொண்டு அதற்கு மாற்றானவற்றின் மீது வெறுப்பை உமிழ்ந்து போராடுவது (மொழி, இனம், சாதி, மதம், பரம்பரை, கட்சி, அரசியல் தலைவர், சினிமா நடிகர், காதலி…)
  • கட்டுப்படுத்தத் தெரியாத கோபம், காமம்
You might also like

Leave A Reply

Your email address will not be published.