வட இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்.. பொறுத்துக் கொண்டோம்.. அத்தனையும் உண்மை

0 468

கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம்
கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம்..

பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்…பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம்,

தமிழர்களை ஏமாற்றி குறுக்கு வழியில் மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம்.

தமிழக அஞ்சலக பணிகளுக்கு வட நாட்டினரை வேலைக்கு அமர்த்தினார்கள். பொறுத்து கொண்டோம்.

தென்னக இரயில்வேயில் வட நாட்டினரை வேலைக்கு அமர்த்தினார்கள். பொறுத்து கொண்டோம்.

TNPSC EXAM வட நாட்டினர் எழுதி பாஸ் செய்கிறார்கள். பொறுத்து கொண்டோம்.

BHEL/Trichy இல் 2000 வட நாட்டினரை வேலைக்கு அமர்த்தப்பட்டனர். பொறுத்து கொண்டோம்.

Golden rock railway workshop க்கு வட நாட்டினரை வேலைக்கு அமர்த்தினார்கள். பொறுத்துக் கொண்டோம்.

SBI யில் வேலையில் சேர்வதற்கு முன்னேறிய ஜாதியினர் cut off மார்க்
28% என்றார்கள். பொறுத்து கொண்டோம்.

தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனை விரட்டிவிட்டு பிராமணர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் மறைகளை அகற்றிவிட்டு சமஸ்கிருத மந்திரம் கொண்டு வந்தார்கள் பொறுத்துக்
கொண்டோம்

சிங்களர் இலங்கையில் தமிழர்களை கொன்றார்கள் பொறுத்துக்
கொண்டோம்

தமிழருடைய கச்சத்தீவை வடஇந்தியர்கள் இலங்கைக்கு கொடுத்தார்கள்.
பொறுத்துக்
கொண்டோம்

ரஷ்யாவில் வெடித்து சிதறி 2 லட்சம் பேர் உயிர் இழந்த அதே ரஷ்ய தொழில்நுட்ப அணு உலைகளை நம் மண்ணில் அமைத்தார்கள்.
பொறுத்துக்
கொண்டோம்

தமிழரின் விவசாயத்தை அழிக்கும் கெயில் குழாய் பதிப்பு
பொறுத்துக்
கொண்டோம்

நம் சுற்றுசூழலை முற்றிலும் அழிக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சி.
பொறுத்துக்
கொண்டோம்

ஆத்து தண்ணீரை பன்னாட்டு கார்ப்ரே நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு.. தண்ணிரை வற்ற செய்து ஆத்து மணலை கொள்ளை அடித்து வடஇந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு கடத்தினார்கள்.
பொறுத்து கொண்டோம்..

மலைகளை அழிந்து கிரானைட் குவாரிகளை உருவாக்கினார்கள்.
பொறுத்துக் கொண்டோம்..

ஆந்திராவில் நம் தமிழர்களை கொன்றார்கள். பொறுத்துக்
கொண்டோம்..

கர்நாடகாவில் தமிழர் சொத்துகளை அழித்தார்கள். தமிழர்களை அடித்து விரட்டினார்கள். பொறுத்துக்
கொண்டோம்

முல்லை பெரியாறில் தமிழர்களை விரட்டினார்கள் பொறுத்துக்
கொண்டோம்

இனி நீட் தேர்வு மூலம்
இங்குள்ள
மருத்துவ
மனைகளுக்கும் குறுக்கு வழியில் இந்திகார மருத்துவர்கள் வரஉள்ளார்கள். பொறுத்துக்
கொள்வோம்.

இன்று தமிழக மாணவர்களுக்கு திறமை குறைந்து விட்டது என பாஜக கட்சியினர் சொல்கிறார்கள்.
நாளை தமிழர்களுக்கு தமிழ் படிக்கவே தகுதியில்லை என்று ஹிந்தியை திணித்து தமிழை அழிப்பார்கள்..
பொறுத்துக் கொள்வோம்.

தமிழர்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்வோம்..
நமக்குத்தான் இலவச அரிசியும், பொழுது கழிக்க நூறு நாள் வேலையும், களைப்பு நீங்க சராயமும், திரையில் சினிமாவும், சண்டையிட்டு சாக சாதியும் எளிதாக கிடைக்கிறதே.

இப்படிக்கு

சாதி, மதத்தால் பிளவுபட்டு, வரலாற்றின் வீரத்தையும் மானத்தையும் இழந்து அழிவின் விளிம்பில் நிற்கும் நாதியற்ற தமிழ்இனத்தின் மக்களில் ஒருவன்…..!!!!!!!

யார் எழுதியது என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு வரிகளும் செருப்பால் அடித்தது போல் உள்ளது..

You might also like

Leave A Reply

Your email address will not be published.