யார் இவர்கள்..? ஏன் சமுதாயம் இவர்களை கண்டு கொள்ளவில்லை..? அப்படி என்ன தீங்கு செய்கிறார்கள்..?

0 193

பனையின் பிள்ளைகள் இவர்கள் இவர்களின் நோக்கம் நீர்நிலைகளை மீட்பது கருவேல மரங்களை அகற்றி அங்கு பனையின் விதைகளை விதைக்கிறார்கள் விதைப்பதோடு இல்லாமல் அதன் முளைத்து வரும் வரை பாதுகாக்கிறார்கள்..!
இவர்களை ஏன் அரசாங்கம் கண்டுகொள்வதில்லை என்றால் உங்களுக்கே தெரியும் நீர்நிலைகளை அழிப்பது மட்டுமே அரசு வேலை அதனை மீட்கும் இவர்களை எப்படி கண்டுகொள்ளும்..! நாங்கள் அறிந்தவரை இவர்கள் 2 லட்சம் பனை நடவு செய்துள்ளார்கள் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் இவர்களின் கால்தடம் படாத இடம் இல்லை

காடுகள், மலைகள், மரங்கள், ஆறுகள் – இவற்றையெல்லாம் ரசிப்பதற்கு எல்லோருக்கும் ஆவல் உண்டு. ஆனால், இரண்டு நாட்கள் சுற்றுலா முடியும் வரை மட்டுமே! அதன்பின், வாழ்க்கை என்னவோ அலுவலக கேபினுக்குள்ளும், மடிக்கணினிகளோடும், செல்ஃபோனில் பரபரப்பான உரையாடல்களாகவும் பலருக்கும் கடந்துபோகிறது. காடுகளோடும் மலைகளோடும், மரங்களோடும் இரண்டறக் கலந்து வளர்ந்த ஒருவரின் அனுபவம் நமது அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒருவரின் அனுபவங்களை இந்தப் பகுதியில் தொடராக பதியவிருக்கிறோம். இயற்கை அவருக்கு கற்றுத் தந்த பாடங்களை நீங்களும் உள்வாங்கிக் கொள்ளக் காத்திருங்கள்!எளிமையாகச் செல்வதானால், மனிதர்களின் உதவி காடுகளுக்குத் தேவையே இல்லை. காட்டு மரங்களை யாரும் நட்டு வளர்க்கவில்லை. காடுகள் இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது அழிவுகளை சந்தித்தாலும், காடுகள் தங்களைத் தாங்களே மறு சீரமைப்பு செய்துகொள்கின்றன. நான் காடுகளில் கவனித்த முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு பெரிய மரம் வீழ்ந்ததென்றால் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில், அங்கு வேறொரு மரம் அதன் இடத்தைப் பிடித்திருக்கும். அங்கு யாரும் வந்து மரம் நட்டுவிட்டுச் சென்றார்களா என்றால், நிச்சயமாக இல்லை! உண்மையைச் சொல்லப்போனால், மனிதர்கள் யாரும் அங்கு வராததால்தான் அவை எந்த ஒரு தடையும் இல்லாமல் விரைவில் வளர்ச்சியடைகின்றன. 2 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள யானையை அவரால் இருந்த இடத்திலிருந்தே உணரமுடியும். மர உச்சியில் இருக்கும் சிங்கவால் குரங்கினை மோப்ப சக்தியால் உணர்ந்து நம்மிடம் அவர் சுட்டிக்காட்டுவார். நாம் கவனித்துப் பார்த்தால் ஒரு பெரிய மரத்தின் கீழ் 15 முதல் 20 சிறிய மரங்கள் வளர்ந்து வரும். அந்த மரங்கள் சூரிய ஒளியை எட்டிப்பிடிக்க எத்தனிக்கும். ஆனால், பெரிய மரத்தின் கீழ் உள்ள அவைகளால் சூரிய ஒளியை நேரடியாகப் பெற முடியாது. ஆனால், அவை தொடர்ந்து காத்திருக்கும். நாள் கணக்கிலோ, வாரக் கணக்கிலோ அல்ல, வருடக்கணக்கில் அந்த மரங்கள் காத்திருக்கும். பெரிய மரம் ஒன்று வீழ்கையில், அந்த சிறிய மரங்களுக்குள் பெரிய போட்டி ஒன்று நடக்கும். எது தன் உச்சியை உயர்த்தி, சூரிய ஒளியைப் பெறுகிறதோ அது பெரிய மரமாக தன் கிளைகளைப் பரப்பும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.