முல்லை பெரியாறா..? பேரியாறா..? உண்மை என்ன..? திரிக்கப்பட்ட வரலாறு என்ன..?

0 314

முல்லை பேரியாறு (பெரியாறு என்பது தவறாக நாம் உச்சரிக்குறோம் பேரியாறு என்பது தான் சரி) அனை கட்டியதற்க்காக கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு

முல்லைப் பெரியார் என்ற பெயர் சரியா?
செய்திகளில் அடிக்கடி இடம்பெறும் பெயர் முல்லைப் பெரியார். அதிலுள்ள ‘பெரியார்’ பெரியவர்களைக் குறிப்பதுமன்று. பெரியாறு’ என்று குறிப்பதுமன்று. அந்த ஆற்றுக்குப் பேரியாறு என்னும் பெயரைச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டிருக்கிறது.

‘பெருமலை விளங்கிய பேரியாற்றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங்கிருப்ப…’
-என்பன சிலம்பின் வரிகள்.

பேரியாறு என்பதை ஆங்கிலத்தில் Periyar என்றெழுதப்போக, ஆங்கிலம் வழியாக நாம் நம்மை அறியும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் அதை அப்படியே பெரியார் என்று எடுத்துக்கொண்டோம். கடந்த பத்தாண்டுகளாக இந்தப் பெயர் ஊடகத்தவர்களிடம் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

பேரி என்றால் முரசு. ஜெயபேரிகை கொட்டடா’ என்ற பாடல் உங்கள் நினைவுக்கு வரவேண்டும். முல்லை என்பதற்கு வெற்றி என்றும் பொருளுண்டு. இப்பொழுது முல்லைப் பேரியாறு என்பதன் பொருட்செறிவை உணர்க.

வெற்றி முரசுபோல் கொட்டி முழக்கி ஆர்ப்பரித்துப் பாயும் ஆறு’ என்ற பொருளில் தமிழர்கள் வைத்த பெயர்தான் ‘முல்லைப் பேரியாறு.’ ஆறும் இழந்து பேரும் மறந்து அறிவிழந்தோமா நாம் ?

– கவிஞர் மகுடேசுவரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.