மண்ணுள்ளி பாம்புகள் ஏன் லட்சத்தில் விற்கப்படுகிறது..? அதன் ரகசியம் என்ன..?

1 535

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பாம்பை பல வடநாடுகளில உணவுக்கும், சூப்பாகவும் பயன்படுத்தி வருகின்றனர் பாம்பு இனத்தில் சுமார் 300 வகைகள் இருப்பதாகவும், நம் இந்தியாவில் 200 வகையான பாம்புகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம், கட்டுவீரியன், கொம்பேறி மூக்கன் பல்வேறு பாம்புகளும் உண்டு.

இதே இனத்திலுள்ள ராஜநாகம் வகை பாம்புகளில் விலைமதிக்க முடியாத முத்துகளும் உண்டு. இந்த முத்துகள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆங்கங்கே நடைபெற்று வருகின்றன. கொடூர விஷத்தன்மை கொண்ட பாம்புகளை பிடித்து விஷம் எடுத்து மருத்துவத்துக்கு பயன்படுத்துவதும் நாம் அறிந்ததே.

தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருதலைமணியன் என்று கூறப்படும் மண்ணுள்ளி பாம்புக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த மண்ணுளி பாம்பு மண்புழு வகையை சார்ந்தது. மண்ணுக்குள்ளேயே வாழ்ந்து அதனுள்ளேயே உணவை தேடிக் கொள்வதால் மண் உள்ளேயிருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளி பாம்பு என்ற பேச்சு வழக்கத்திற்கு வந்தது வேறு விசயம்.

இருதலை மணியன் என்றழைக்கப்படும் இந்த மண்ணுளி பாம்புக்கு கடிக்கும் தன்மை கிடையாது. நாக்கினால் நக்கும் தன்மை உண்டு. அப்படி நம் மீது அதன் எச்சில் பட்டால் தோலில் அலர்ஜி ஏற்பட்டு ஆங்கங்கே தடிப்பு, தடிப்பாய் ஏற்பட்டு மாற்றம் ஏற்படும்.

கடந்த ஆண்டுவரை இந்த பாம்பை யாரும் சீண்டியதாக தகவல் இல்லை. ஆனால் சமீபகாலமாக தமிழகமெங்கும் தீவிரவாதிகளை சல்லடைபோட்டு தேடும் போலீசார் போல இந்த பாம்புக்காக தமிழகமெங்கும் புரோக்கர்கள் கும்பல் கும்பலாக தமிழகமெங்கும் கிராமம் கிராமமாக போய் படையெடுத்து மண்ணுளி பாம்பை பிடித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணையும், பொன்னையும் தேடி மக்கள் அலையும் இந்தக் காலத்தில், மண்ணுள்ளி பாம்புக்கு வந்த திடீர் கிராக்கிக்கு என்ன காரணம்…இந்த வகை பாம்புகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைப்பதுதான் முக்கிய காரணம். இந்த பாம்பை வீட்டில் வளர்த்தால் வாஸ்து-சாஸ்திரப்படி ராசி என்றும், இந்தபாம்பு இருக்கும் வீட்டில் மகாலெட்சுமி கடாட்சம் பெருகும் என்றும் அதற்காகத்தான் தொழிலதிபர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 மாதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வனத்துறை பணம், பாம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

இதுகுறித்து விசாரிக்க நாம் களத்தில் குதித்தோம்….இதுபற்றி பெயர் கூறவிரும்பாத சிலர் கூறியதாவது..இந்த மண்ணுளி பாம்பு வாஸ்து படி ராசியான பாம்புதான். இந்த பாம்பு பரவலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள விளைநிலங்கள், தரிசு நிலங்களிலும், அதிகம் கிடைக்கின்றன.நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், திசையன்விளை, மாறந்தை, விகேபுரம், பாபநாசம், சுரண்டை, வாசுதேவநல்லூர், குற்றாலம், வள்ளியூர், ராதாபுரம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், தெய்வ செயல்புரம், வல்லநாடு மற்றும் தேரிக்காட்டு பகுதிகளிலும் இந்த பாம்பை பெரிய கும்பல் வேட்டையாடி வருகின்றன.

ஆனால் அப்பாவிகள் சிலர் சில ஆயிரங்களுக்காக பாம்பு வேட்டையில் ஈடுபட்டு வனத்துறையிடம் மாட்டுவது, வாடிக்கையாகி வருகிறது. மேலும் பாம்பு கடத்தல் புரோக்கர்களோடு வனத்துரையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் கூட்டு சேர்ந்து இந்த வேட்டையில் ஈடுபட்டு வசூலில் கள்ளா கட்டி வருகின்றனர்.மண்ணுளி பாம்புக்கு எடைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுக்கின்றனர். ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை உள்ள பாம்புகளுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கொடுக்கின்றனர்.

முட்டாளுக்கு மத்தியில் அரியவகை இயற்கை வளங்கள் அனைத்துமே அழிக்கப்படுகிறது

You might also like
1 Comment
  1. பிரேம்குமார் says

    அப்படியா ” விசியம்

Leave A Reply

Your email address will not be published.