மசூத் அசார் இறந்துவிட்டான் என்று ஒருபுறம் உளவுத்துறை கூற..! உயிரோடுதான் ராணுவ மருத்துவமனையில் உள்ளான் என்று பாகிஸ்தான் கூறுகிறது

0 154

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில நாட்களில்ஷஇந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவலை இந்திய ராணுவம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. மேலும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி அறிவிக்க வேண்டும் என்று பி3 நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவந்தனர்.

இதற்கிடையில், மசூத் ஆசார் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. சிகிச்சையில் இருந்த மசூத் அசார் நேற்று இரவு (2-3-2019) உயிரிழந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததாக தகவல்கள் வந்துள்ளன. மசூத் ஆசார் உயிரிழந்தது குறித்து பாகிஸ்தான் ராணுவம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

யார் இந்த மசூத் அசார்

பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குறித்து இப்போது பார்க்கலாம்.

1968 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஹவல்புர் பகுதியில் பிறந்தவர் மசூத் அசார். ஹர்குத் அல் அன்சர் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மசூத் அசார், அந்த அமைப்பின் ஒரு பிரிவுக்குத் தலைவர் ஆனார் உருது பத்திரிகையான சத் எ முஜாஹிதீன் மற்றும் அரபு பத்திரிகையான சாவ்தே காஷ்மீர் ஆகியவற்றின் ஆசிரியர் ஆனார்

இதனைத் தொடர்ந்து ஹர்குத் உல் அன்சர் பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் ஆன அசார் அதற்கு நிதி திரட்டவும், ஆட்களைப் பணியமர்த்தவும் பல நாடுகளுக்குச் சென்றார்இரு பிரிவு இஸ்லாமியர்களை ஓர் அமைப்பின் கீழ் இணைக்க அவர் முயற்சி மேற்கொண்டார்.

1994 ஆம் ஆண்டு ஜம்மு ஹர்குத் அல் அன்சர் அமைப்பில் நிலவிய கோஷ்டி மோதலைத் தீர்த்து வைக்க காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு வந்தார் மசூத் அசார்1995 ஆம் ஆண்டு இந்திய அரசால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவிற்கு எதிரியானது

1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்திய அரசால் அவர் விடுவிக்கப்பட்டார் பாகிஸ்தானில் தஞ்சமடைந்த மசூத் அசார், தனது பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமத் மூலம் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட மசூத் அசார் 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார்2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மசூத் அசார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் அரசு இதை மறுத்தது

You might also like

Leave A Reply

Your email address will not be published.