பெற்ற பிள்ளை பிரிந்து இருந்தால் கூட இரண்டு நாள் தான் வேதனையில் இருந்துருப்போம்! என் காளையின் பிரிவு என்னை புலம்பச்செய்கின்றது….

0 199

ஜல்லிக்கட்டு என்றாலே பாசமும் வீரமும் தான்… வளர்ப்பவரிடம் பாசத்தையும் தன்னை அடக்கவரும் வீரனிடம் வீரத்தையும் காட்டும் குணமுடையது ஜல்லிக்கட்டு காளை. வளர்ப்பவரிடம் பாசத்தோடு சேர்த்து புகழையும் சேர்த்து வருகின்றது. ஒரு மனிதருக்கு பெயர் புகழ் என்று வேறு எந்த துறையிலும் சேர்த்திருந்தாலும் அது புகழ்ச்சியின் உச்சியை தொட்டுவிடாது. அதுவே ஜல்லிக்கட்டில் புகழை பெற்று விட்டால் அதுவே புகழ்ச்சியின் உச்சியை சென்று அடையும். ஏன்றால் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு தன் பரம்பரைக்கும் சொல்லிக்கொடுக்கும் விளையாட்டு. தன் வாரிசுகள் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே புகழ் பாடுவார்கள், என் வீட்டு காளை, என் தாத்தா வளர்த்த காளை என்று தன் பேர புள்ளைகள் என்றென்னும் உலகிற்க்கு நிஞாபகப்படுத்துவார்கள்.

அப்படி ஒரு வெற்றியை பதிவு செய்த காளைகள் வீரம்பட்டி ராம்சிவா காளை. தன் வீரத்தால் வீரர்களுக்கு சவால் விட்ட காளை. ஜல்லிக்கட்டில் வெற்றியை மட்டும் கண்டு வளர்த்தவருக்கு பெயரும் புகழும் வாங்கி கொடுத்த காளை. இன்று எங்கும் காளையின் புகழை பேசும் படி செய்த காளை இன்று இவ்வுலகை விட்ட சென்றால் நாம்மால் எப்படி நம்ப முடிகின்றது.

வீரம்பட்டி ராம் ஆனந்த் என் காளை என்று ஒருநாளும் சொல்லிக்கொள்ள மாட்டேன் என் பிள்ளை என் சகோதரன் என்றே மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பேன். ஜல்லிக்கட்டிக்கு சென்றால் களம் காண வரும் காளையை என் பெயரை சொன்னால் போதும் பார்வையாளர்களின் கரகோஷமும் விசில் சத்தமும் காதகிழிக்கும் அந்த புகழும் பெரும் எனக்கு வாஙௌகி கொடுத்த என் செல்லப்பிள்ளையை இன்று என்னோடு இல்லை என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவன் எப்போதும் என்னிடமே இருப்பான். எனக்கு வாழ்வியயில் ஒரு அர்த்தத்தை கொடுத்த என் பிள்ளை ஊர் பேசும் பிள்ளையாக வளர்த்த எனக்கு இந்த உலகில் இதை விட பெரிய சம்பாத்தியம் வேறு எதும் இல்லை. அதனாலே காளையின் உருவத்தை என் கையில் டாட்டோ (பச்சை) போட்டுள்ளேன்.

வீரம்பட்டி சிவா எங்களுக்கு பெயர் சேர்த்த என் பிள்ளை எங்களுடன் இல்லை என்று யாராவது பேசிக்கொள்ளும் போது ஏதோ பெரியதாய் இழந்துவிட்டோம் என்றே தோனுகின்றது. வளர்த்த பிள்ளையை பறிக்கொடுத்து இருந்தால் கூட ஏதோ இரண்டு, மூன்று நாள் அழுதுவிட்டு எங்கள் வேதனையை மறந்து விட்டுறுப்போம், ஆனால் இவனின் பிரிவை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு நினைவு இருக்கும் வரை என் புள்ளை என்னுடனே இருப்பான்…

ராப்பூசல் முனியன் : என்ன தான் ராம்சிவா காளையா இருந்தாலும் காளையை பார்த்துகொண்டவர் அதிகமா பிரியம இருந்தவர் ராப்பூசல் முனியன். அவங்களுக்கே சொல்ல முடியாத வேதனையில் இருந்தாலும் அதை விட 2 மடங்கு சோகத்தில் மூழ்கியவர் முனியன் தான். காளையை ஜல்லிக்கட்டிற்க்கு கொண்டு சென்று அவிழ்த்து அதை பார்த்து வந்த சரவணன், மோகன், ரமேஷ், சிவா, முருகேசன் ஆகியோரும் துக்கத்தில் மூழ்கி 3 நாள் தண்ணீர் கூட குடிக்க மனமில்லாமல் வேதனை வலியில் தவிர்தார்கள். காளையின் நினைவிலே தவிர்த்தார்கள்.

காளை வளர்ப்பு வெறும் வளர்ப்பு மட்டும் இல்லை அது ஒரு களை, தன் களையால் வெற்றியை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் ஒரு வழி. அது அனைவருக்கும் அமைந்து விடாது கோவில் கருவரை போன்று காளையின் கட்டுட்தரையை பார்த்து தன் பிள்ளைகள் போன்று வளர்த்து அவனிடம் வீரத்தை எதிர் பார்ப்பதே காளை வளர்ப்பின் முக்கியமான ஒன்று. பாரம்பரியத்தோடு போட்டி போடும் அனைவருக்கும் இதைபோன்று பாசமும் வீரமும் ஒரு பரம்பரை உணர்வு அடங்கி இருக்கும்.

காளையின் கட்டுத்தரையில் சாமியாக!

You might also like

Leave A Reply

Your email address will not be published.