பெம்மினிசம் என்றால் என்ன..? இந்தனை இழிவு, இழுக்கு தேவைதானா..? ஆணுக்கு நிகர் பெண் எங்கு வரவேண்டும்..?

0 412

பெண்ணியம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த உதாரணம் எம் தமிழீழ சகோதரிகள்….

ஏய்..! பெண்ணியவாதிகளே முதலில் பெண்மை என்றால் என்னவென்று படித்துவிட்டு வாருங்கள், பிறகு பேசலாம் பெண்ணியம் என்றால் என்ன என்று..

Dubsmash, musically, ஆண்களுக்கு நிகராக இருப்பது, அர்த்தமற்ற புரிதல் இல்லாத காதல், இதைதான் இன்றைய பெரும்பான்மை பெண்களின் மனதில் பெண்ணியம் என வரையறுக்கப்பட்டு இருக்கிறது..

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு நிகராக வருவது இல்லை பெண்ணியம்..

பெண் தனக்குள் இருக்கும் பெண்மையை உணர்ந்து, பெண்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை களைந்து, அனைத்து பெண்களும் சமமாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும்..

ஏனெனில் நீ பெண்ணியம் என்று பேசும்போது, உன்னை போன்று ஒரு பெண் இந்த சமூகத்தில் ஏதோ ஒரு இடத்தில் வஞ்சிக்கப்படுகிறாள், கற்பழிக்கப்படுகிறாள், அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழியில்லாத சூழ்நிலையில் தவறான முடிவு ஒன்றை எடுக்கிறாள்..

முதலில் பெண்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய ஒன்றிணையுங்கள்..

இப்படி கூறுவதால் என்னை ஆணாதிக்கவாதி என நினைக்காதீர்கள்,

பெண்ணியம், பெண்ணியம் என தவறான பெண்ணியவாதிகளால் வாழ்க்கையை இழந்த சகோதரியின் தம்பி நான்….வெகுசன மக்களின் ஒருவன்

பதிவு:உவன்

படித்ததில் பிடித்தால் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.