பெண்பிள்ளைகள் வயசுக்கு வந்தால் ஏன் பாவாடை தாவணி அணியச் சொன்னார்கள் தெரியுமா..?

0 382

அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பாவாடை தாவணி கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை கட்டுவார்கள்.முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த அந்த பழக்கத்தை இப்போது நாம் கைவிட்டு விட்டோம்.

நமது முன்னோர்கள் ஏன் அப்படி சொன்னார்கள் தெரியுமா..?தாவணி அணிந்த பெண்
பருவமடைந்ததில் இருந்து, கர்ப்பபை உள்ள இடத்திலும், தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

அப்போது தான், அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.ஆனால், தற்போதைய காலகட்டத்தில், ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என்று அணிந்து கொள்கிறார்கள். அதனால், கர்ப்பபை உஷ்ணம் அடைந்து, அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி, உடலே கர்ப்பபையை காக்க நீர்கட்டியை கர்ப்பபையிக்குள் ஏற்படுத்தி உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது.

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப பையில் நீர்க்கட்டி பிரச்சனை ஏற்படுகின்றது. அதனால், கரு உருவாகுவதில் தடை ஏற்படுகிறது. அதை சரி செய்ய மருத்துமனைக்கு சென்று பல ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள். அதற்கு காரணம், முன்னோர்கள் சொல்லி கொடுத்ததை நாம் மறந்து விட்டோம் என்பதே ஆகும்.

அதனோடு, அந்த காலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்த உடற்பயிற்சி.வயிற்றினை அழுத்தி மண்டியிட்டு வேலைசெய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும்.

தாவணி அணிந்த பெண்
ஆனால், தற்போது அதற்கான தேவை இல்லாத போதும், வீடு பெருக்குவது, மாப் போட்டு துடைப்பது என்று அனைத்து வேலைகளையும் நின்று கொண்டே செய்கிறார்கள்.

சகோதரிகளே…!! தயவுசெய்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நாகரீகம்… வளர்ச்சி… என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும், ஆரோக்கியம் என்ற விசயத்தில், பத்து அடி பின்னோக்கி செல்கிறீர்கள்… என்பதனை மட்டும் மறவாதீர்கள் .நம்முடைய பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப் புதுப் பெயரில், தற்போது பெண்களுக்கு வரும் நோய்களை பற்றி கேள்விப்படுகிறோம்… இதற்கு காரணம் நம்முடைய புதிய வாழ்க்கை முறையே.

வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு…, வேகாத உணவை…, வேகமாக உண்டு…, வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி… வேகமாக உழைத்து…. வேகமாகவே மடிந்தும் விடுகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.