புட்டி பால் விசாமாகும் என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா..? The baby killer

0 826

புட்டிபால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காதில் சீழ் வருதல், வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற வியாதிகள் வரலாம்.

புட்டிபால் குடிக்கும் குழந்தை தாயிடம் பாலை சரிவர குடிக்காது, இதனை nipple confusion என்று ஆங்கிலத்தில் கூறுவோம்.

இரண்டு வயது வரை மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதற்க்கு தேவையான முக்கிய மூல பொருட்கள் தாய்பாலில் மட்டுமே இருக்கிறது.எனவே கட்டாயம் இரண்டு வயது வரை மட்டுமாவது தாய்பால் கொடுக்க வேண்டும். அதிக நாள் தாய்பால் குடிக்கும் குழந்தைகள் மிகவும் புத்திசாலி குழந்தைகளாக வளருகின்றனர்.

தாய்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைய இருப்பதால் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்வருவதில்லை.

குழந்தைகள் தூங்கும்போது பால் பாட்டில் வைத்து கொண்டே தூங்குவதால் பல் சொத்தையாக வாய்ப்பு இருக்கிறது.

பாலை அதிகமாக தண்ணீருடன் சேர்த்து கொடுப்பதால் குழந்தை நோஞ்சான் குழந்தையாக வளரும்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாச பிணைப்பு (BONDING ) தாய்பால் புகட்டுவதன் மூலம் ஏற்படும், இது புட்டிபால் கொடுப்பதால் தடைபடும்.

பசும்பால் சில குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.இதனால் வயிற்றுபோக்கு, அடிக்கடி சளி இருமல், தோல் அலர்ஜி, போன்ற பிரச்சினைகள் வரலாம். இதனை cows milk protein intolerance என்று கூறுவோம்.

எனவே புட்டிபால் கொடுப்பதை தவிர்க்கவும்.

பிரசவத்தில் தாய் இறக்க நேரிட்டால் அதில் பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க பயன்பட்டதே புட்டி ஆனால் இன்று சர்வசாதாரணமாக அனைத்து தாய்மார்களுமே இதை பயன்படுத்துகின்றனர்..!

DR.C.MAHESH KUMAR

You might also like

Leave A Reply

Your email address will not be published.