பில்கேட்ஸ் என்னை விட ஒரு பணக்கார இளைஞன் இருக்கிறான் என்றார் யார் அந்த இளைஞன்..?

0 350

கணினி உலகின் பேரரசன் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்டாராம் உங்களை விடப்

பணக்காரர் எவரும் இருக்கிறாரா? என்று அதற்கு பதிலளித்த பில்கேடஸ் ஆம்.ஒருவர் இருக்கிறார் என்று கூறினராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டபோது நியூயோர்க் நகர விமான நிலையம் சென்றேன்.நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.

நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. எனவே, அதை விடுத்தேன்.அப்போது, ஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை என்று கூறி இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது.

அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான். ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய இலாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.

பின்னர் 19 வருடங்கள் கழித்து நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.

ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.அவனைக் கேட்டேன். என்னைத் தெரிகிறதா என்று.தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்கேட்ஸ் என்று கூறினார்.

பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன்.

தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.

உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது. என்றான் அந்தக் கருப்பு இளைஞன்.ஏன்? என்றேன் நான்.

அந்த இளைஞன் நான் ஏழையாய் இருந்த போது உங்களுக்குக் கொடுத்தேன் ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீர்கள்.

ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும்? என்றான்.

அந்த கருப்பு இளைஞன் தான் என்னை விட பணக்காரன் என்பதை உணர்ந்தேன் என்றார் பில்கேட்ஸ்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.