பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்று பலரும் கூறும் போது வேடிக்கையாக தான் உள்ளது..!

0 710

இந்தியா_ பாகிஸ்தான் என்றால் குழந்தைக்கு கூட தெரியும் காரணம் வரலாறு அப்படி..! ஆனால் வரலாறு தெரியவேண்டும் பேசவேண்டுமே தவிர பழமையை வைத்து மட்டுமே எதுவும் தற்போது தீர்மானம் செய்து விட முடியாது..!

தற்போது பலரும் போர் வேண்டும் என்று கூறுகிறார்கள் அவர்களிடம் கேளுங்கள் முதலாம் உலகப்போர் எப்போது ஆரம்பமானது எப்போது முடிந்தது எதனால் போர் நடந்தது என்று நிச்சயம் பதில் பேச மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு தெரியாது என்று மட்டுமே கடந்து விட முடியாது காரணம் இந்திய அரசியல் அப்படி..!

காங்கிரஸ் ஆட்சியில் தவறு நடந்தால் காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் பெரிதாக அந்த தவறை பற்றி பேசுவது கிடையாது, பாரதிய ஜனதா கட்சியில் தவறு நடந்தால் பாஜக தொண்டர்கள் யாரும் பெரிதாக பேசுவது கிடையாது..!இவை மாநில கட்சிகளுக்கும் பொருந்தும்..! இதுதான் இங்கே உள்ள அடிமை அரசியல் கட்டமைப்பு..!

ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் எனப்படும் ஊடகங்கள் சற்று வித்தியாசமானது அதவது ஆளுவது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு வலைந்துகொடுத்தாகவேண்டும்..! அதுவே இங்கு ஊடக தர்மம்.

சரி இப்போது போருக்கு வருவோம்..!

இந்தியாவை விட மிகச்சிறிய நாடுதான் பாகிஸ்தான் இந்தியாவிடம் உள்ள அணு ஆயூதங்களை வைத்து அதிகபட்சமாக பாகிஸ்தானை ஒரு வாரத்தில் சீரழிக்க முடியும், பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை வைத்து நாம் ஏற்படுத்தும் இழப்புகளுக்கு இணைகயாக அவர்களும் இந்தியாவை சீரழிக்க முடியும்..!

இதனால் இரு நாட்டுக்கும் என்ன பயன்..?

இருநாடுகளும் பொருளாதாரத்தில் பின்நோக்கி செல்லும் வெளிநாட்டில் தங்கியுள்ள இந்தியன் அடித்து இந்தியா அனுப்பபடுவான்..!

அணு ஆயுதங்களை உருவாக்கும் தளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் மக்கள் ஏன் நீங்களும் நானும் கூட இறக்க நேரிடலாம்..!

உலக நாடுகள் பெரும்பாலும் இஸ்லாம், கிருஸ்தவத்தை உள்ளடக்கியதே இவைகள் ஒன்றினைந்து இந்தியாவை மீண்டும் அடிமைபடுத்த துவங்கும்..!அதெப்படி முடியும் அப்புடின்னு நீங்க கேட்கலாம் இன்று வரை அமெரிக்காவிற்கு அடிபணிந்து நடக்கும் நாடுகளே அதிகம் அதில் இந்தியாவும் ஒன்று…!

சுதந்திரம் பெற்ற பிறகு நாம் கண்ட வளர்ச்சி அனைத்தும் தரைமட்டமாகும் மீண்டும் 1947 ஆண்டிற்கு முன்பு செல்ல நேரிடும்.

இந்தியாவிற்கு பாகிஸ்தான் எதிரியான வரலாறு

மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமானது போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது.

ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் க்ஷபோரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது.

இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும்.

இந்தியா முதன்முறையாக 1974 இல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.

கார்கில் இழப்பு

இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம்:

527 பலி
1,363 படுகாயம்
1 போர் கைதி
1 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
போர் விமானம் விழுந்து நொறுங்கியது
1 உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது

பாகிஸ்தான் இராணுவ அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள்

357-4000 பலி
(பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்)
665+ இராணுவ வீரர்கள் படுகாயம்
8 போர் கைதிகள்

அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

பாகிஸ்தான் பிரதமரின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக இருந்தன. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக லாகூர் வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சில மாதங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தது அந்த அமைதிப் பேச்சுவார்தைகளை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது.

இருந்தும் கார்கில் பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு பெரும் போர் தொடங்காமல் விட்டது இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

நீதி
இருநாடுகளும் தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டுமே தவிர மக்கள் மத்தியில் எதிரி என்று மேடை போட்டு கூறி மறைமுகமாக திவிர வாதத்தை வளர்த்து விடக்கூடாது..!

தீவிரவாதம் எந்த அளவிற்கு ஒழிய வோண்டுமோ அந்த அளவிற்கு பாசிசமும் அழியவேண்டும்

பாகிஸ்தானுக்கு போருக்கு சென்ற ராணுவ வீரன் உயிருடன் திரும்பியதை கொண்டாடும் நாம் உள்நாட்டில் மாட்டை ஏற்றி செல்பவன் உயிரோடு திரும்பவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்..!

நாட்டுபற்றையே தீவிராதமாக மாற்ற அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும்

என்னைய தீவிராவதி , நக்சலைட் அப்புடின்னு சொல்ல இங்கையும் ஒரு கூட்டம் வரும் அவர்களுக்கு நான் கூற வருவது என்னவென்றால் இங்கே பொங்கல் கிடையாது மாற்று பாதையில் செல்ல வேண்டும்..!

பகிருங்கள் சிலருக்கு தேவைப்படலாம் இந்த பதிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.