பழையகஞ்சி , பச்சைமிளகாய்.!… அந்தக்காலம்!… நூடில்ஸ் !பாஸ்த்தா ! பாஸ்ட் பூட் இந்தக்காலம்!….

0 429

பழமை திரும்புது!

தன்னிச்சையாய் இயங்குது ,வயது!….
தடுமாறிபோகுது ,மனசு!….

காலம் மாறி போச்சு !..
திங்கிற சாப்பாடு, நடக்கிற நடப்பு சேர்ந்தே போச்சு!…:

பழையகஞ்சி , பச்சைமிளகாய்.!… அந்தக்காலம்!…
நூடில்ஸ் !பாஸ்த்தா ! பாஸ்ட் பூட் இந்தக்காலம்!….

இயற்க்கையோடு ஒன்றியது ,!…அந்தக்காலம்!..
செயற்க்கையோடு போட்டிபோடுவது !..,இந்தக்காலம்!,.

வாழை இலை !…தாமரை இலை ! …மண்சட்டி அந்தக்காலம் !..
பிலாஸ்டிக் இலை …மெல்மோவேர்! …சிறாமிக்ஸ் ஜாமான் இந்கக்காலம்!..

வந்தது !!!!!கேஸ்!..எலக்டிரிகல்!..மற்றும் எலக்ட்டறானிக் அடுப்பு!
விரட்டி அடிச்சாச்சு!!!! விறாட்டி! விறகு! மண்ணென்னை! அடுப்பு!

நெருப்பில்லா அடுப்பு !சுடாத சட்டி! அல்ட்ரா மாடுலர் கிச்சன்!!
எல்லாம் மாயாஜால கோலம் ! விஞ்ஞான பிக்சன்!…

கோழி ,கால்நடை, தாவரம்! எல்லாம் செயர்க்கை உற்பத்தி!
போலியின் சாரம் !..மறைமுகமாய் தறுது ,எண்ணில்லா நோய்களின் உற்பத்தி!…

இழந்தோம் உண்மையை!!!!அடைந்தோம் எண்ணிலடங்கா வேதனை!
தேவையா இந்த பொய்மை!எல்லாம் அழகிய செயற்க்கை மாயை!!!!

பழையதின், நன்மைகள் ,நினைக்கதூண்டுத்து!..
புதியதின் தீமைகள் ,விலகத் தோன்றுது!…

நன்மை! பழமை வசம்!…காதல் துளிர் விடுது!
பொய்மை,புதுமைவசம்! மாற்றம் தேடுது!..

இயற்க்கைக்கு உயிர் கொடுப்போம்! ,…
மாய செயற்க்கையை ,பின்னுக்கு தள்ளிவைப்போம்!…

பதிவு : அ.அப்துல் வஹாப்

You might also like

Leave A Reply

Your email address will not be published.