நிறைய பொய்களை நான் நம்பி இருக்கேன். அதில் ஒரு சில குறிப்பிடுகின்றேன், சில பொய்கள் மறந்து விட்டது

0 599

சக்திமான் உண்மையில் ஆபத்து நேரத்தில் வந்து காப்பாத்துவார். (மறக்கவே முடியாத தொலைகாட்சி தொடர், அப்போதெல்லாம் என் வீட்டில் தொலைகாட்சி இல்லை, இந்த ஒரு தொடரை பார்க்க பல வீடுகளுக்கு நண்பர்களுடன் சென்று பார்த்துள்ளோம். நினைவு தெரிந்த வரை இந்த தொடரை குறைந்த பட்சம் ஒரு 10 பேருக்கு குறையாமல் தான் பார்துள்ளோம். அக்கம் பக்கத்து வீட்டினர் அனைவரும் ஏதேனும் ஒருவர் வீட்டிற்கு சென்று கும்பலாக அமர்ந்துவிடுவோம். )

என் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தூரத்தில் (வயல் பகுதியில்) ஒரு சில பனை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் இருக்கும். அது தான் இந்த உலகத்தின் எல்லை அதோடு இந்த உலகம் முடிந்துவிடும். இப்படினு யாரோ ஒருத்தன் சொன்னதை கேட்டு நா 6ஆம் வகுப்பு படித்த வரை அப்படியே நம்பி இருக்கேன்.

மேலும் கடலுக்கு அப்பரம் உலகம் முடிஞ்சிடும் பிறகு ஊர் இருக்காது என நம்பியதுண்டு.

WWE போட்டியில் அண்டர் டாக்கர் என ஒருவர் இருப்பார் அவருக்கு 7 உயிர் இருக்குனு சிலர் கூறியதை நான் 7, 8 ஆம் வகுப்பு வரை நம்பி இருக்கேன்.

சூரியன், நிலா , நட்சத்திரம்லா வானத்துல ஒரு நீண்ட கம்பியில் மாட்டி தொங்கிகிட்டு இருக்கும்னு நம்பிகிட்டு இருந்திருக்கேன்.

2000 ஆம் ஆண்டில் உலகம் அழிய போகிறது எண்ணி பயந்து கிடந்த நாட்கள் நிறைய உண்டு.

பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும்.

நல்ல பாம்பை அடிக்கக் கூடாது, அது நம்மை படம் எடுத்துவிட்டால் நாம் எங்கு சென்றாலும் வந்து பழிவாங்கும்.

ஆல் அவுட் விளம்பரத்தில் வரும் அந்த “ஆல் அவுட் இயந்திரம்” உண்மையிலேயே பெரிய நாக்கு வச்சிகிட்டு கொசுக்களை பறந்து பறந்து புடிக்கும்னு பல மாதங்கள் நம்பி இருக்கேன். (எங்கள் வீட்டில் அந்த இயந்திரம் அப்போதுலாம் வாங்கியதே இல்லை. ஒரு நாள் என் பக்கத்து நண்பன் வீட்டில் வாங்கியபோது தான் எனக்கு உண்மை புரிந்தது. )

சில நேரங்களில் நட்சத்திரம் விழுந்ததாக சொல்லி ஒரு சாணியில் ஒரு கல்லை வைத்து எடுத்து போவார்கள். உண்மையில் நட்சத்திரம் இவ்ளோ பெருசுதான்னு நினச்சேன்.

நான் 11ஆம் வகுப்பு படிக்கும் வரை குழந்தை எப்படி பிறக்கும் என்பதை ரொம்ப சின்னபுள்ள தனமாக தவறாக புரிந்து வைத்திருந்தேன். (9, 10ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் இதை சார்ந்த பாடங்கள் இருந்தது ஆனால் என் ஆசிரியர் அதை எதுமே பரியும் படி சொல்லி தரவில்லை. மதிப்பெண்களுக்காக குருட்டு மனப்பாடம் செய்தேன். 11 ஆம் வகுப்பு நான் கணிணி அறிவியல் பிரிவு, ஆனால் என்னுடன் 10ஆம் வகுப்பு படித்த நன்பர்கள் 11ல் உயிரியல் பிரிவில் இணைந்தனர் பிறகு இவர்கள் சொல்லி தான் நான் புரிந்து வைத்திருந்தது தவறு என உணர்ந்தேன். )

மயில் இறகை புத்தகம் நடுவில் வைத்தால் அது வளரும் என என்னி என் பள்ளி புத்தகங்களில் வைத்துள்ளேன்.

கடவுள்கள் உண்மையில் இருகின்றார்கள் என நம்பினேன்.

இரயில் வரும் முன் தண்டவாளத்தில் நாணயத்தை வைத்தால் அது காந்தமாக மாறும் என யாரோ சொன்னதை கேட்டு சில முறை முயன்று பார்த்ததும் உண்டு. ஆனால் இரயில் சென்ற பிறகு அந்த நாணயம் கிடைத்ததே இல்லை.

நான் 3ஆம் வகுப்பு 4காம் வகுப்பு படித்துகொண்டிருக்கும் போது, ஒருவர் சிறுநீர் சென்ற இடத்திலே இன்னொருவரும் சிறுநீர் சென்றால் எதோ ஒரு குத்தம்னு யாரோ சொல்லி, மேலும் அதற்கு பரிகாரமாக கண் இமை முடியை ஒன்னு அந்த இடத்துல போடனும்னு சொல்லி என் வகுப்பில் அனைவரும் இது போன்று அடிக்கடி பரிகாரம் செய்தது உண்டு.

விதையுடம் பழம் முழுங்கிவிட்டால் வயிற்றிலிருந்து தலை வழியாக மரம் முளைக்கும் என நம்பியிருக்கேன்.

பணம் மரத்தில் காய்க்கும் என நம்பி, வீட்டை சுற்றி ஒரு ரூபாய் நாணயங்களை புதைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றிய நாட்கள் அதிகம். ( பிறகு ஒரு நாள் நான் தண்ணீர் ஊற்றுவதை பார்த்து மண்ணை தோண்டி பார்க்க காசுகள் இருப்பதை பார்த்து எண்னிடம் கேட்க, ஆம் வீடு சுற்றிலும் இப்படி தான் வைத்துள்ளேன் என சொல்லி சரியான அடி வாங்கி இருக்கேன். )

நிலவில் உண்மையாகவே பாட்டி வடை சுட்டு வித்துகிட்டு இருக்காங்கனு நம்பி இருக்கேன்.

தனியாக இரவில் செல்லும் போது நமக்கு துணையாக நிலாவும் கூடவே வரும்னு என் அம்மா சொன்னாங்க. உண்மையாவே நிலா நம்மை பாதுகாக்க நமக்காகவே பின்தொடர்ந்து வருகின்றது என நினைத்துகொண்டிருந்தேன்.

ஜுராசிக் பார்க் முதல் பாகம் பார்த்த பிறகு உண்மையாகவே அந்த மிருகம் சில நாடுகளில் உள்ளது என புரளிகளை நம்பியதுண்டு.

பேய்கள் என ஒன்று இருப்பதாக எண்ணி, நாங்கள் சுடுகாடு வழியாக எங்கேனும் செல்ல நேர்ந்தால், அதற்கு முன்பே என் நண்பர்களிடம் பேசிகொள்வோம், அவரவர்க்கு வேறு வேறு புதுப்பெயர்கள் வைத்துகொள்வோம், அந்த சுடுகாடு நெருக்கத்தில் யாரையாது கூப்பிடவேண்டுமென்றால் உண்மையான பெயரை சொல்லி கூப்பிட மாட்டோம், அந்த தற்காலிக பெயரை சொல்லியே அழைப்போம். ( காரணம்: பேய் நம் பெயரை கேட்டுகொண்டு இரவில் நம் வீட்டிற்கு வந்து நம் பெயர் சொல்லி நம்மை அழைக்கும் என பயந்து. )

ஜெயசூர்யா ஸ்பிரிங் பேட் வைத்திருப்பதாகவும், அதனாலே வேகமாக அடிப்பதாகவும்.

வானத்தில் கூட்டமாக கொக்கு பறக்கும்போது நகங்களை தேய்த்துக்கொண்டால் நகத்தில் பூ விழும். எத்தனை பூ அத்தனை புது துணிகள் கிடைக்கும்.

மண்டையோடு மண்டை முட்டிக்கொள்ள நேர்ந்தால், மீண்டும் முட்டிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கொம்பு முளைத்துவிடும்.

சின்னப்பாப்பா பெரிய பாப்பா நாடகத்தில் வரும் பட்டாபிக்கு உண்மையாகவே காது கேக்காது என எண்ணினேன்.

இவ்வாறு நிறைய பொய்களை சுமந்து வந்தேன். இன்னும் நிறைய இருக்கு சட்டென்று நினைவிற்கு வரவில்லை.

நினைவிற்கு வரும்போது பதிலை புதுப்பிக்கின்றேன்.

குண்டு பல்பில் பின் பகுதியில் உள்ள ஈயத்தை கழட்டி எடுத்துவிட்டு, அந்த கண்ணாடி குடுவை வழியே கிணற்றினுள் பார்த்தால் இந்த பூமி தெறியும் என நம்பி வீட்டில் எறிந்து கொண்டு இருந்த குண்டு விளக்குகளை இவ்வாறு கழட்டி முய்ற்சி செய்து என் அம்மாவிடம் தோசை கரண்டியால் அடிவாங்கி இருக்கேன்.

அண்ட காக்கை வீட்டு வாசலில் கத்தினால் எதோ கெட்ட செய்தி காத்துகொண்டுள்ளது என நம்பி, பல முறை அவைகளை துரத்தி விட்டு இருக்கின்றேன்.

அதே போல மணியன் காக்கை வீட்டு வாசலில் கத்தினால் , வீட்டிற்கு விருந்தினர் வர போகின்றாற்கள் என எண்ணி அவைகளுக்கு நான் உண்ணும் போது அவைகளுக்கும் சோறு போடுவேன் . ( காரணம் அப்போ தான் விருந்தினர் வருவார்கள், திண்பண்டம் வாங்கி வருவார்கள் என.

You might also like

Leave A Reply

Your email address will not be published.